உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / முப்பெரும் விழா..

முப்பெரும் விழா..

மேலுார்: மேலுாரில் தொழில் முனைவோர்கள் சங்கம் சார்பில் 3ம் ஆண்டு துவக்க விழா, ஆலோசனை கூட்டம், ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. செயலாளர் அறிவழகன் வரவேற்றார். தலைவர் உக்கிரபாண்டியன் தலைமை வகித்தார். பொருளாளர் பத்மநாபன் முன்னிலை வகித்தார். மாரியப்பன் நாடார் ஸ்டீல்ஸ் கம்பனி நிர்வாகி விக்னேஷ்வரன் தொழில் முனைவோர், இளைஞர்கள் புதிதாக தொழில் துவங்க ஆலோசனைகள், பொருளாதார வளர்ச்சியில் வேலை வாய்ப்பு பற்றி எடுத்துரைத்தார். ஆதரவற்ற குழந்தைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு சங்கம் சார்பில் நிதி வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி