கோயில் கார்த்திகை முதல் வெள்ளியை முன்னிட்டு சுவாமிக்கு விசேஷ அபிஷேகம், அலங்காரம்: முனியாண்டி சுவாமி கோயில், யூனியன் வங்கி காலனி, 4வது தெரு, விளாங்குடி, மதுரை, இரவு 7:00 மணி. ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்கு சித்திரை வீதி, மதுரை, காலை 10:30 மணி. பக்தி சொற்பொழிவு விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம்: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, இரவு 7:00 மணி. திருக்குறள்: நிகழ்த்துபவர் - பகவதி சந்தானம், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி. திருமந்திரம்: நிகழ்த்துபவர் - சுப்புராமன், வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி. பொது திருப்பரங்குன்றம் மலை வழக்கில் வெற்றி பெற்றுத் தந்த உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ராமகிருஷ்ணனுக்கு பாராட்டு விழா: கல்யாணி மஹால், ஆகாஷ் பேமிலி கிளப், பரவை தலைமை: மாவட்ட தலைவர் பக்தவத்சலம், பாராட்டி கவுரவித்தல்: மாநிலத் தலைவர் கணேசன், வாழ்த்துரை: விஸ்வாஸ் புரமோட்டர்ஸ் நிர்வாக இயக்குநர் சங்கர சீதாராமன், கிளப் நிர்வாக இயக்குநர் பாலாஜி, காஞ்சி மீனாட்சி மருத்துவக் கல்லுாரி டாக்டர் சுந்தரராஜன், ஏற்புரை: வழக்கறிஞர் ராமகிருஷ்ணன், ஏற்பாடு: தமிழ்நாடு பிராமணர் சங்கம், மாலை 6:00 மணி. மகளிர் தொழில்முனைவோர்களுக்கான கருத்தரங்கம்: தொழில் வர்த்தக சங்கம், காமராஜர் ரோடு, மதுரை, தலைமை: சங்கத் தலைவர் ஜெகதீசன், மகளிர் தொழில்முனைவோர் அமைப்பு சேர்மன் ராஜகுமாரி, சிறப்பு விருந்தினர்கள்: பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர், இசையமைப்பாளர் ரமேஷ் விநாயகம், ஆபரேஷன் சிந்துார் ராணுவ அதிகாரி பூனம் தேவ்கன், பாடகர் பெபின், காலை 9:00 மணி. மதுரை மெட்ரோ திட்டத்தை திரும்ப அனுப்பிய மத்திய அரசை கண்டித்து தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம்: பழங்காநத்தம் ரவுண்டானா, மதுரை, பங்கேற்பு: அமைச்சர் மூர்த்தி, நகர்செயலாளர் தளபதி, தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன், காலை 9:00 மணி. இந்திய தொழில் கூட்டமைப்பின் மதுரை மண்டலம் சார்பில் ஆரோக்கியம் குறித்த கருத்தரங்கம்: ஜி.ஆர்.டி., கிராண்ட், ரிங் ரோடு, மதுரை, சிறப்பு விருந்தினர்: வேலம்மாள் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை நரம்பியல் துறை தலைவர் டாக்டர் கவிதா, மாலை 6:00 மணி. கண்காட்சி நீருக்கடியில் அக்வாரியம்: அம்மா திடல், வண்டியூர் டோல்கேட் அருகில், மதுரை, ஏற்பாடு: தி ஓஷன் அமைப்பு, மதியம் 2:00 முதல் இரவு 10:00 மணி வரை. பட்டுச் சேலைகள் கண்காட்சி, விற்பனை: திருபுவனம் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி, விற்பனை சங்கம் கிளைகள், 141, கீழவெளிவீதி, தவிட்டுச்சந்தை, மதுரை, 12, சேர்மன் துளசிராம் 2வது தெரு, மதுரை, ஏற்பாடு: திகோ சில்க்ஸ், காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை. தேசிய புத்தகக் கண்காட்சி: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், மேலக்கோபுரத் தெரு, மதுரை, காலை 9:30 முதல் இரவு 8:30 மணி வரை.