கோயில்ஆதிசங்கர பகவத் பாதாளுக்கு பூஜை: காஞ்சி காமகோடி பீடம், ஸ்ரீமடம் சமஸ்தானம், 1/114, அக்ரஹாரம், முள்ளிப்பள்ளம், சோழவந்தான், காலை 9:00 மணி.62வது மணிவிழா ஆண்டு உற்ஸவம்: சுடலைமாடசாமி கோயில், பாத்திமா நகர், பைபாஸ் ரோடு, மதுரை, குன்றம் முருகன் சன்னதியில் இருந்து தீர்த்தம் எடுத்தல், குடி அழைத்தல், மாலை 5:30 மணி, வைகை ஆற்றில் அம்மன் அழைத்தல், இரவு 8:00 மணி.சித்திரைத் திருவிழா -பூத்தட்டு திருவிழா: நாகம்மாள் கோயில், கூத்தப்பன்பட்டி, மேலுார், மாலை 6:30 மணி, விளக்கு பூஜை இரவு 7:00 மணி.பக்தி சொற்பொழிவுதிருவாசகம்: நிகழ்த்துபவர் - வெங்கடாசலம், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.ஆதிசங்கரர் வரலாறு: நிகழ்த்துபவர் - ஓம் சக்தி நடேசன், வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், 4, கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:00 மணி.அகண்டநாமம், ஸத்ஸங்கம்: நிகழ்த்துபவர் - ஹரிதாஸ், நாமத்வார், இளங்கோ தெரு, அய்யர்பங்களா, மதுரை, காலை 8:00 மணி.பொதுகுழந்தைகளுக்கான கோடை கொண்டாட்டம்: கலைஞர் நுாற்றாண்டு நுாலகம், மதுரை, கதை வாங்கலையோ கதை - வழங்குபவர்: சரிதா ஜோ, ஏற்பாடு: பள்ளிக் கல்வித்துறை, பொது நுாலக இயக்கம், காலை 11:00 மணி.வணிகத்தில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு - கருத்தரங்கம்: சவுராஷ்டிராசேம்பர் ஆப் காமர்ஸ், சாலை பிள்ளையார் கோயில் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, பேசுபவர்: கே.எல்.என்., பொறியியல் கல்லுாரியின் செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் துறைத் தலைவர் சுரேஷ் ராஜா, சிறப்பு விருந்தினர்: மதுரை ஸ்ரீமந் நாயகி இயக்க நிறுவனர் பிரகாஷ் குமார், மதுரை தென்னிந்திய கைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள், வியாபாரிகள் சங்கத் தலைவர் கோவர்தனன், பங்கேற்பு: தலைவர் மோகன்ராம், பொதுச் செயலாளர் குபேந்திரன், நிகழ்ச்சிக் குழு சேர்மன் ரூபேஷ் பாபு, மாலை 6:00 மணி.ஹிந்தி பேச்சுப் பயிற்சி - சான்றிதழ் வகுப்பு: ராகவ் நிகேதன், 4வது தெரு, கூடல்நகர், மதுரை, பயிற்சியாளர்: நடராஜன், இரவு 7:50 மணி.கண்காட்சிஅலுவலக தளவாடங்கள், கட்டில், மெத்தை, சோபா கண்காட்சி, விற்பனை: மடீட்சியா ஹால், மதுரை, காலை 9:30 முதல் இரவு 9:30 மணி வரை.மருத்துவம்குடல், கல்லீரல் இலவச பரிசோதனை முகாம்: தேவதாஸ் மருத்துவமனை, சர்வேயர் காலனி, மதுரை, காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை.யோகா, தியானம்பெண்களுக்கு இலவச யோகா, தியானம், மூச்சுப் பயிற்சி: சுவாமி சிவானந்தா யோகாசன ஆய்வு மையம், தனக்கன்குளம், மதுரை, காலை 10:00 முதல் 11:00 மணி வரை.இலவச தியானம், மூச்சுப் பயிற்சி: ஸ்வஸ்தம், 9ஏ, செக்கடி தெரு, நரிமேடு, மதுரை, காலை 6:00 மணி.