மேலும் செய்திகள்
இன்று இனிதாக ... (24.01.2026) மதுரை
24-Jan-2026
கோயில் தெப்ப உற்ஸவம் 7ம் நாள்: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை,சுவாமி சன்னதி இரண்டாம் பிரகாரத்தில் பிச்சாண்டவர்சுவாமி எழுந்தருளுதல், காலை 9:00 மணி, யாளிவாகனத்தில் அம்மனும், நந்திகேசுவரர்வாகனத்தில் சுவாமியும் சித்திரை வீதிகளில் எழுந்தருளுதல், இரவு 7:00 மணி. தைப்பூசத் திருவிழா: சோலைமலை கோயில், அழகர்கோவில், யாக சாலை பூஜைகள், காலை 8:30 மணி, உற்சவ மூர்த்திக்கு அபிஷேகம், காலை 10:30 மணி, சிம்மாசனத்தில் சுவாமி புறப்பாடு, மதியம் 12:30 மணி, பூச்சப்பரவாகன உலா, மாலை 6:00 மணி. ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்கு சித்திரை வீதி, மதுரை, மதியம் 3:00 மணி. பக்தி சொற்பொழிவு பெரியபுராணம்: நிகழ்த்துபவர் - மல்லிகா, மதுரை திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி மதுரை, மாலை 6:30 மணி. ராமக்கிருஷ்ணரின் அமுதமொழிகள்: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, இரவு 7:00 மணி. தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் - டாக்டர் கோகுல்நாத். சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், காலை 7:15 மணி. இணையில்லா ஹிந்து மதம்: நிகழ்த்துபவர் - சண்முக ஞானசம்பந்தன், தெய்நெறிக் கழகம், தெற்காடி வீதி, மதுரை, தலைமை: சுவாமி சிவானந்த சுந்தரானந்தா, இரவு 7:00 மணி. பொது வானமாமலை ஜீயர் சுவாமிகள் வருகை: அழகர்கோயில் திருமாலிருஞ்சோலை அழகர் மங்களாஸாசனம், காலை 7:00 மணி, மதுரைகூடலழகர் கோயில்மங்களாஸாசனம், ஏற்பாடு: வரவேற்பு கமிட்டித் தலைவர் ராமகிருஷ்ணன், மாலை 6:00 மணி. ஹிந்தி பேச்சுப் பயிற்சி சான்றிதழ் வகுப்புகள்: ராகவ் நிகேதன், 4 வது தெரு, கூடல்நகர், மதுரை, பயிற்றுநர்: காந்தி மியூசிய கல்வி அலுவலர் நடராஜன், பள்ளி, கல்லுாரி 'மாணவர்களின் உற்பத்தித் திறனை மேம்படுத்துதல்' கருத்தரங்கம்: மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி, மதுரை, சிறப்புரை: அமெரிக்கன் கல்லுாரி முன்னாள் பேராசிரியர் முத்துராஜா, முன்னிலை: முதல்வர் ராமசுப்பையா, மதியம் 12:30 மணி. என்.எஸ்.எஸ்., முகாம்: தேனுார், கோயில் உழவாரப் பணி, காலை 8:30 மணி முதல், தலைமை: முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் மாயாண்டி, மாணவர்களின் சமூக விழிப்புணர்வு, ஏற்பாடு: செந்தமிழ்க் கல்லுாரி என்.எஸ்.எஸ்., பிரிவு, மாலை 6:30 மணி. மருத்துவம் பொது மருத்துவ முகாம்: வடமலையான் மருத்துவமனை, சொக்கிக்குளம், மதுரை, காலை 9:00 முதல் மாலை 5:00 மணி வரை. கண்காட்சி கைத்தறி, நாட்டு ஆடைகளுக்கான கண்காட்சி: காந்தி மியூசியம் மைதானம், மதுரை, ஏற்பாடு: மத்திய ஜவுளித்துறை அமைச்சகம், காலை 10:30 முதல் இரவு 9:00 மணி வரை.
24-Jan-2026