உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  இன்றைய நிகழ்ச்சி / டிச., 12

 இன்றைய நிகழ்ச்சி / டிச., 12

கோயில் பால் அபிஷேகம்: தங்கமய முருகன் கோயில், சேவுக பெருமாள் நகர், சிவகங்கை ரோடு, விளத்துார், மதுரை, சுவாமிக்கு பாலாபிஷேகம், சிறப்பு அலங்காரம், காலை 8:30 மணி. கார்த்திகை மாத கடைசி வெள்ளி சிறப்பு அபிஷேகம்: முனியாண்டி சுவாமி கோயில், யூனியன் வங்கி காலனி, 4வது தெரு, விளாங்குடி, மதுரை, சுவாமிக்கு குதிரை வாகன அலங்காரம், இரவு 7:00 மணி. கால பைரவாஷ்டமி, ஆண்டுவிழா: வரசித்தி விநாயகர் கோயில், அசோக்நகர் முதல் வீதி, கூடல்நகர், மதுரை, பைரவர், மீனாட்சி சுந்தரேஸ்வரர் அபிஷேகம், காலை 10:00 மணி, அன்னதானம், மதியம் 12:00 மணி, ஐயப்பனுக்கு அபிஷேகம், ஏற்பாடு: பாஸ்கர வாத்தியார், மாலை 6:30 மணி. தேய்பிறை அஷ்டமி - சிறப்பு பூஜை: சக்தி விநாயகர் கோயில், ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலக வளாகம், மதுரை, காலை 10:00 மணி. 108 திருவிளக்கு பூஜை: நாமத்வார் பிரார்த்தனை மையம், இளங்கோ தெரு, அய்யர்பங்களா, மாலை 6:30 மணி. ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்கு சித்திரை வீதி, மதுரை, காலை 10:30 மணி. பக்தி சொற்பொழிவு வடமொழி வேதம் குறித்து ஆன்மிக உபன்யாசம்: நிகழ்த்துபவர் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி, லட்சுமி சுந்தரம் ஹால், கோகலே ரோடு, தல்லாகுளம், மதுரை, ஏற்பாடு: சத்குரு சங்கீத சமாஜம், தமிழ்நாடு பிராமண சமாஜம் மாவட்ட கிளை, மாலை 6:30 மணி. லலிதா சஹஸ்ரநாம பாராயணம்: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, இரவு 7:00 மணி. 45 நாள் சம்பூர்ண கீதா பாராயணம், யாகம்: கீதா பவனம், அமெரிக்கன் மிஷன் சந்து, காமராஜர் ரோடு, கீழவாசல், மதுரை, தலைமை: கிரிஜா, முன்னிலை: தியாகராஜன், விநாயகர், கிருஷ்ணர், லட்சுமி அஷ்டோத்திரங்கள், பத்மநாப குரு ஸ்தோத்திரம், பூர்ணாஹுதி, காலை 7:30 மணி. திருக்குறள்: நிகழ்த்துபவர் - பகவதி சந்தானம், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி. திருமந்திரம்: நிகழ்த்துபவர் - சுப்புராமன், வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி. பள்ளி, கல்லுாரி 57வது ஆண்டு பட்டமளிப்பு விழா: மதுரை காமராஜ் பல்கலை, மதுரை, தலைமை: கவர்னர் ரவி, முன்னிலை: உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன், சிறப்பு விருந்தினர்: இஸ்ரோ முன்னாள் சேர்மன் சிவன், ஏற்பாடு: பதிவாளர் ராமகிருஷ்ணன், ஆட்சிமன்றக்குழு ஒருங்கிணைப்பாளர் சுந்தரவல்லி, மதியம் 3:00 மணி. நுண்கலைகள் தொடக்க விழா: பாத்திமா கல்லுாரி, மதுரை, தொடக்கவுரை: முதல்வர் பாத்திமா மேரி, காலை 8:30 மணி. உலக ஆரோக்கிய பாதுகாப்பு நாள் - விழிப்புணர்வு நிகழ்ச்சி: வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி, நாகமலை புதுக்கோட்டை, சிறப்பு விருந்தினர்: வளையங்குளம் வட்டார சுகாதார அதிகாரி தனசேகரன், காலை 9:30 மணி. சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு விரிவுரைத் தொடர் அறிமுக நிகழ்ச்சி: லேடி டோக் கல்லுாரி, மதுரை, சிறப்பு விருந்தினர்கள்: உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஷிவ்ராஜ்.வி.பாட்டில், வழக்கறிஞர் செல்வ கோமதி, மதியம் 3:00 மணி. பொது சர்வ சமய அமைதிப் பிரார்த்தனை: சேவாலயம் மாணவர் இல்லம், செனாய் நகர், மதுரை, தலைமை: செப்சிரா செயலாளர் மோகன், அருட்செய்தி வழங்குபவர்: உளவியலாளர் ஆஷா, ஏற்பாடு: பல்சமய ஒற்றுமை நட்புறவு வளர்ச்சி மையம் (செப்சிரா), மாலை 6:00 மணி. வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி: ஊமச்சிகுளம், வீரபாண்டி கிராமங்கள், மதுரை, தலைமை: முதல்வர் ராஜூ, முன்னிலை: தலைவர் ஜெயராமன், செயலாளர் ஆர்.வி.என்.கண்ணன், தொடங்கி வைப்பவர்: ஓட்டல் பார்க் பிளாசா நிறுவனர் கே.பி.எஸ்.கண்ணன், ஏற்பாடு: யாதவர் கல்லுாரி நாட்டு நலப்பணி திட்டம், மதியம் 12:30 மணி மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா : மீனாட்சி அரசு மகளிர் கலைக் கல்லுாரி, மதுரை, தலைமை: கலெக்டர் பிரவீன் குமார், ஏற்பாடு: மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, காலை 10:00 மணி. மருத்துவம் இலவச காது பரிசோதனை, காது கேட்கும் கருவி பயிற்சி: குளோபல் ஹியரிங் எய்டு சென்டர், 7, டாக்டர் சத்தார் ரோடு, அண்ணாநகர், மதுரை, காலை 10:00 முதல் இரவு 7:00 மணி வரை. இலவச சிறப்பு மருத்துவ முகாம்: வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி, நாகமலை புதுக்கோட்டை, சிறப்பு விருந்தினர்: எலும்பியல் டாக்டர் சுப்ரமணியம், ஏற்பாடு: நாட்டு நலப்பணி திட்டம், காலை 9:30 மணி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி