மேலும் செய்திகள்
இன்றைய நிகழ்ச்சி; மதுரை
20-Jul-2025
கோயில் குரு வாரத்தை முன்னிட்டு காஞ்சி மஹா பெரியவர் விக்ரகம், வெள்ளிப் பாதுகைக்கு புஷ்பாஞ்சலி, தீபாராதனை: மஹா பெரியவர் கோயில், பொன்மேனி நாராயணன் ரோடு, எஸ்.எஸ்.காலனி, மதுரை, சிறப்பு பூஜை: சந்தோஷ சாஸ்திரிகள் குழு, ஏற்பாடு: அனுஷத்தின் அனுக்கிரக நிறுவனர் நெல்லை பாலு, மாலை 5:30 மணி. ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்குச் சித்தரை வீதி, மதுரை, மதியம் 1:30 மணி. ஆடி அமாவாசை சிறப்பு பூஜை: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, காலை 7:30 மணி. கருட வாகனத்தில் கள்ளழகர் எழுந்தருளல்: கள்ளழகர் கோயில், அழகர்கோவில், இரவு 7:15 மணிக்கு மேல் 8:00 மணிக்குள். பஞ்ச முக ஆஞ்சநேயருக்கு சிறப்பு திருமஞ்சனம், அலங்காரம்: கற்பக விநாயகர் கோயில், பூங்கா நகர் காலனி, கே.கே.நகர், மதுரை, காலை 9:00 மணி, குபேர சாயிபாபாவிற்கு கூட்டுப் பாராயணத்துடன் ஆரத்தி, மாலை 6:30 மணி. சுந்தர மகாலிங்கேஸ்வரருக்கு தீபாராதனை, கருப்பண சுவாமிக்கு சந்தனம் சாத்துப்படி: சதுரகிரி, மதுரை, ஏற்பாடு: மதுரை சவுராஷ்டிரா ஜன சேவா, காலை 10:00 மணி. சிவபெருமானுக்கு பாலபிஷேகம்: வரசக்தி விநாயகர் கோயில், தொழிற்பேட்டை காலனி, புதுார், காலை 7:00 மணி. பக்தி சொற்பொழிவு திருவாசகம்: நிகழ்த்துபவர் - வெங்கடாசலம், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி. பள்ளி, கல்லுாரி ஷேக்ஸ்பியரின் 'ஒதெல்லோ' தழுவலில் நாடகம்: லேடி டோக் கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர் பியூலா ஜெயஸ்ரீ, இயக்கம்: பேராசிரியர் கீர்த்தனா, ஏற்பாடு: ஆங்கிலத் துறை, காலை 9:00 மணி, 11:00 மணி, மதியம் 2:30 மணி. செயற்கை நுண்ணறிவு - பயிற்சி பட்டறை: வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி, மதுரை, சிறப்பு விருந்தினர்: வின்சப் இன்போடெக் நிர்வாகி வெங்கடேஷ், ஏற்பாடு: தகவல் தொழில்நுட்பத் துறை, காலை 9:00 மணி, இந்திய விடுதலைப் போராட்டம் - சொற்பொழிவு: நிகழ்த்துபவர் - உதவிப் பேராசிரியர் தங்கராஜ், மாலை 6:00 மணி. பார்வையற்றோர் பள்ளி மாணவர்களுடன் ஒருநாள்: புனித ஜோசப் பார்வையற்றோர் பள்ளி, பரவை, தலைமை: வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி முதல்வர் ராஜேஸ்வர பழனிச்சாமி, ஏற்பாடு: நுண்ணுயிரியியல் துறை, காலை 10:00 மணி. பொது அஞ்சல் துறையை தனியார் மயமாக்கப்படுவதை கண்டித்து ஆர்ப்பாட்டம்: தலைமை அஞ்சல் அலுவலகம், தல்லாகுளம், ஏற்பாடு: அகில இந்திய அஞ்சல் ஊழியர்கள் சங்கங்கள், அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கம், மாலை 5:30 மணி. மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்: மேற்கு கோட்ட அலுவலகம், அரசரடி, மதுரை, தலைமை: மேற்பார்வை பொறியாளர் ரெஜினா ராஜகுமாரி, காலை 11:00 முதல் மதியம் 1:00 மணி வரை. எண்ணெய் விதை பயிர்களுடன் ஒருங்கிணைத்து மாவட்ட அளவிலான தேனீ வளர்ப்பு பயிற்சி, கருத்தரங்கு: அமெரிக்கன் கல்லுாரி, மதுரை, ஏற்பாடு: சொக்கிகுளம் 'வாப்ஸ்' தொண்டு நிறுவனம், காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை. தமிழ்க்கூடல்: உலகத் தமிழ்ச்சங்கம், மதுரை, தலைமை: இயக்குநர் பர்வீன் சுல்தானா, சிறப்புரை: செந்திக்குமார நாடார் கல்லுாரி இணைப் பேராசிரியர் பாலாஜி, காலை 11:00 மணி. உங்களுடன் ஸ்டாலின் முகாம்: வார்டு 8, 11, மண்டல 1 அலுவலகம், சர்வேயர் காலனி, மதுரை, வார்டுகள் 1, 2, மண்டலம் 2 அலுவலகம், புகழ் கல்யாண மகால், புதுவிளாங்குடி, மண்டலம் 3 அலுவலகம், பங்கேற்பு: வார்டு எண்: 52, சுற்றுலா பிளாசா பெரியார் பஸ் ஸ்டேண்ட், மதுரை, மண்டலம் 5, வார்டு எண்: 71, 74 வார்டுகள், மீனாட்சி சமுதாய கூடம், பழங்காநத்தம், மதுரை, காலை 9:00 மணி முதல் மதியம் 3:00 மணி வரை. கண்காட்சி ஹஸ்தகலா - கைவினைப் பொருட்கள், ஜூவல்லரி கண்காட்சி: ஜே.சி. ரெசிடன்சி, சின்ன சொக்கிகுளம், மதுரை, காலை 11:00 முதல் இரவு 9:00 மணி வரை.
20-Jul-2025