மேலும் செய்திகள்
இன்றைய நிகழ்ச்சி/ ஆக.23 க்குரியது
23-Aug-2025
கோயில் ஆவணி மூலத்திருவிழா: மீனாட்சி அம்மன் கோயில், பொற்றாமரைக் குளத்தில் தீர்த்தவாரி, திருக் கல்யாண மண்டபம், காலை 9:00 முதல் 9:29 மணிக்குள், அம்மன், சுவாமி வெள்ளி ரிஷப வாகனத்தில் வடக்காடி வீதி 16 கால் மண்டபம் சேர்தல், மாலை 6:00 மணி, திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமியும் திருவாதவூர் மாணிக்கவாசகர் சுவாமியும் 16 கால் மண்டபத்தில் இருந்து விடை பெறுதல், மாலை 6:00 மணி. கும்பாபிஷேகம்: அருணகிரி சுவாமிகள் கோயில், அவனியா புரம், மதுரை, கணபதி ஹோமம், பூஜைகள், காலை 6:00 மணி, கணபதி ஹோமம், பூஜைகள், பிரசாதம் வழங்குதல், மாலை 6:05 மணி முதல். ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்குச் சித்திரை வீதி, மதுரை, காலை 9:00 முதல் 10:30 மணி வரை. பக்தி சொற்பொழிவு தாயுமானவர்: நிகழ்த்துபவர் - கண்ணன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி. பகவத் கீதை: நிகழ்த்துபவர் - சுவாமி நித்யதீபானந்தர், ராம கிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, மாலை 5:45 மணி. விநாயகர் அகவல் விளக்கவுரை: நிகழ்த்துபவர் - கிருஷ்ணமூர்த்தி, சிரவணானந்த ஆசிரமம், 4 கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி. லலிதா ஸகஸ்ரநாம பாராயணம்: சுவாமி தத்வானந்தா ஆசிரமம், தபால்தந்தி நகர், மதுரை, காலை 7:00 முதல் 8:00 மணி வரை, ரமணரின் சத்தர்ஸனம், வழங்கு பவர் - சுவாமினி பிரசிதானந்த சரஸ்வதி, காலை 9:15 முதல் 10:15 மணி வரை. கூட்டுப்பிரார்த்தனை: நிகழ்த்துபவர் -ஹரிதாஸ், நாமத்வார் பிரார்த்தனை மையம், இளங்கோ தெரு, அய்யர் பங்களா, இரவு 7:00 முதல் 8:30 மணி வரை. மாதாந்திர உழவாரப் பணி: சுப்பிரமணிய சுவாமி கோயில், திருப்பரங்குன்றம், ஏற்பாடு: ஹிந்து ஆலயப் பாதுகாப்பு இயக்கம், காலை 7:00 மணி. பொது புத்தகத் திருவிழா: தமுக்கம் மைதானம், மதுரை, தலைமை: மாநகராட்சி கமிஷனர் சித்ரா, சிறப்புரை: எழுத்தாளர்கள் விஷ்ணுபுரம் சரவணன், மனுஷ்யபுத்திரன், ஏற்பாடு: மாவட்ட நிர்வாகம், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம், மாலை 4:00 மணி முதல், கண்காட்சி நேரம்: காலை 10:00 முதல் இரவு 9:00 மணி வரை. சரவணன்சந்திரன், மனுஷ்யபுத்திரன், ஆத்மார்த்தி, பாலபாரதி ஆகி யோரின் நுால்கள் வெளியீட்டு விழா: மதுரை புத்தகத் திருவிழா அரங்கம், தமுக்கம், மதுரை, சிறப்பு விருந்தினர்கள்: மாநில ஹாக்கி பயிற்சியாளர் காளிமுத்து பாண்டியராஜா, மகாத்மா பள்ளிகள் நிர்வாக இயக்குநர் பிரேமலதா, தொழில் முனைவோர் பொன்னி இந்திய மளிகை மீனாட்சி சுந்தரம், மதியம் 2:00 மணி. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 1939ம் ஆண்டு மதுரை வந்த தினத்தையொட்டி சிலைக்கு மாலை அணிவித்தல்: ஜான்சி ராணி பூங்கா, மதுரை, தலைமை: ஒருங்கிணைப்பாளர் சுவாமி நாதன், மாலை அணிவிப்பவர்: ஏசியன் ஸ்போர்ட்ஸ் உரிமையாளர் கோவிந்தராஜ், ஏற்பாடு: நேதாஜி மக்கள் இயக்கம், காலை 8:00 மணி. திரிவேணி விழா: பகவத் கீதை, சிவபுராணம் விரிவுரை: நிகழ்த்துபவர் - ததேவானந்தா சரஸ்வதி,தெய்வ நெறிக் கழகம், தெற்காடி வீதி, மதுரை, காலை 6:00 மணி, சத்குருநாத ஓதுவாரின் திருமுறை இசை, மீனாட்சி நாயக்கர் மண்டபம், அம்மன் சன்னதி அருகில், மதுரை, தலைமை: தெய்வீக வாழ்க்கை சங்க மாவட்டத் தலைவர் சுவாமி சிவானந்த சுந்தரானந்த சரஸ்வதி, ஏற்பாடு: தெய்வநெறிக் கழகம், மாலை 6:00 மணி முதல். ஆரோக்கிய சந்தை: காந்தி மியூசியம், மதுரை, சிறப்பு விருந்தினர்: நபார்டு அதிகாரி சக்திபாலன், துவக்குபவர்: கலெக்டர் பிரவீன்குமார், ஏற்பாடு: கிரீன் பெம், காலை 10:30 மணி. விளையாட்டு மாவட்ட அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள்: பள்ளி மாணவர்களுக்கான சிலம்பப் போட்டிகள், பள்ளி மாணவிகளுக்கான கோ-கோ போட்டிகள், கல்லுாரி மாணவர் களுக்கான கிரிக்கெட் போட்டிகள், வட்டார அளவிலான சைக்கிளிங் போட்டிகள், ரேஸ்கோர்ஸ் மைதானம், மதுரை, ஏற்பாடு: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், காலை 8:00 மணி முதல்.
23-Aug-2025