மேலும் செய்திகள்
இன்றைய நிகழ்ச்சி / செப்.17
17-Sep-2025
கோயில் ஜெயந்தி, நவராத்திரி உற்ஸவம்: நவநீத கண்ணன் சன்னதி, கீழமாரட் செட்டிய தெரு, மதுரை, நாராயணன் அலங்காரத்தில் கருட வாகனத்தில் சுவாமி வீதியுலா, மாலை 6:00 மணி. ஜெயந்தி உற்ஸவம்: ராம சுவாமி நவநீத கிருஷ்ணசுவாமி கோயில், ராமாயணச் சாவடி தெரு, வடக்கு மாசி வீதி, மதுரை, ஆண்டாள் திருக்கோலம், காலை 8:00 மணி, புன்னை மரக்கிருஷ்ணன் அலங்காரம், மாலை 4:00 மணி, புஷ்பத்தண்டியல் தவழ்ந்த கிருஷ்ணன் அலங் காரம், இரவு 7:10 மணி. நவராத்திரி திருவிழா துவக்கம்: பொன்முனியாண்டி சுவாமி கோயில், பொன்மேனி, மதுரை, கணபதி ஹோமம், மஹா அபிஷேகம், தீபா ராதனை, காலை 6:00 மணி. மஹாளய அமாவாசை: ஆதி சிவன் கோயில், ரயில்வே காலனி, புதுஜெயில் ரோடு, மதுரை, மங்களநாயகி, வில்வ வனேஸ்வரர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங் காரம், காலை 10:30 மணி, தீபாராதனை, காலை 11:30 மணி, அன்னதானம், மதியம் 12:00 மணி. ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்குச் சித்திரை வீதி, மதுரை, மாலை 4:30 மணி. ஞாயிறு ஆராதனை: கிறிஸ்துவின் சபை, விசுவாசபுரி, ஞானஒளிவுபுரம், மதுரை, காலை 10:00 மணி. பக்தி சொற்பொழிவு ஜகம் புகழும் ஜகந்நாதர்: நிகழ்த்துபவர் - தென்திருப்பேரை அரவிந்த்லோசனன், மதனகோபால சுவாமி கோயில், மேலமாசி வீதி, மதுரை, மாலை 6:30 மணி. லலிதா சஹஸ்ரநாமம் பாரா யணம்: நிகழ்த்துபவர் - சுவாமினி ப்ரசிதானந்த சரஸ்வதி, சுவாமி தத்வானந்தா ஆசிரமம், தபால்தந்தி நகர், மதுரை, காலை 7:00 மணி, பகவான் ரமணரின் சத்தர்ஸனம் விளக்கவுரை, காலை 9:15 மணி, தாயுமானவர் சுவாமி பாடல்கள், நிகழ்த்துபவர் - சுவாமி சமானந்தர், இரவு 7:00 மணி. சுவாமி அகண்டானந்தர் ஜெயந்தி: நிகழ்த்துபவர் - சுவாமி நித்யதீபானந்தர், ராம கிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, இரவு 7:00 மணி. ஈஷாவஸ்ய உபநிஷத்: நிகழ்த்துபவர் - சுவாமி அனுபவானந்தா, அக்ரிணி குடியிருப்பு வளாகம், ஆண்டாள் புரம், மதுரை, காலை 9:00 முதல் 10:00 மணி வரை, மாலை 6:30 முதல் இரவு 7:30 மணி வரை. அருங்காதலியின் பெரியவன்: நிகழ்த்துபவர் - சாந்திகுமார சாமி, மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி. பள்ளி, கல்லுாரி டிஜிட்டல் யுகத்தில் பணி யாளர் உறவுகள் - கருத்தரங்கு: ஆர்.எல்.இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் ஸ்டடீஸ், அருப்புக்கோட்டை ரோடு, மதுரை, முன்னிலை: கல்லுாரி இயக்குநர் சுப்பிரமணியன், சிறப்பு விருந்தினர்: டி.வி.எஸ்., சென்சிங் சொல்யூஷன்ஸ் பொன்னியன் செல்வன், காலை 11:30 மணி. ரத்தின பாஸ்கரின் மதுரை மீனாட்சி கோயில் கலையழகு கற்சிற்பங்களின் கோட்டோவிய புத்தக வெளியீடு: தியாகராஜர் கல்லுாரி, மதுரை, சிறப்பு விருந்தினர்கள்: அமைச்சர் தங்கம் தென்னரசு, கல்லுாரித் தலைவர் உமா கண்ணன், மூத்த தமிழறிஞர் சாலமன் பாப்பையா, பட்டிமன்ற பேச்சாளர்கள் பாரதி பாஸ்கர், ராஜா, மாலை 6:00 மணி. சண்முகத் திருக்குமரனின் 5 நுால்கள் வெளியீட்டு விழா, ஆசிரியர் தின விழா, அறி வொளிச்சுடர் விருது வழங்கும் விழா: சேதுபதி மேல்நிலைப்பள்ளி, மதுரை, தலைமை: உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சாமிதுரை, சிறப்பு விருந்தினர்கள்: எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை பேராசிரியர் பாஸ்கரராஜன், அழகர்கோவில் அறங்காவலர் மீனாட்சி பிரியாந்த், துணை மேயர் நாகராஜன், காலை 10:00 மணி. திருக்குறள் திருப்பணிகள் - தொடர் வகுப்புகள்: மணியம்மை பள்ளி, வடக்கு மாசி வீதி, மதுரை, பயிற்சி வழங்குபவர்: அருண்குமார், ஏற்பாடு: தமிழ் வளர்ச்சித் துறை, காலை 10:00 முதல் மதியம் 12:00 மணி வரை. பொது மதுரை தபால் தலை, நாணயவியல் சேகரிப்போர் சங்கக்கூட்டம்: சவுராஷ்டிரா மேல்நிலைப்பள்ளி, மதுரை, தலைமை: தலைவர் சுவாமியப்பன், சிறப்புரை: வாழ்நாள் உறுப்பினர் காதிர் உசேன், காலை 10:30 மணி. இலவச சட்ட உதவி முகாம்: புதுப்பட்டி, மதுரை, தலைமை: தலைவர் சுபாஷ்பாபு, சிறப்பு விருந்தினர்: உயர்நீதிமன்ற நீதிபதி ஸ்ரீமதி, ஏற்பாடு: அகில பாரத வழக்கறிஞர்கள் சங்கம், காலை 9:30 மணி. முன்னேற்ற மேம்பாடு அபிவிருத்தி கூட்டுறவை செயல்படுத்துதல் - கூடலரங்கம் நிறைவு விழா: தொழில் வர்த்தக மையம், காமராஜர் ரோடு, மதுரை, தலைமை: தலைவர் வாசிமலை, சிறப்பு விருந்தினர்: அரசின் முதன்மை செயலர் உதயச்சந்திரன், ஏற்பாடு: தானம் அறக் கட்டளை, மதியம் 3:00 மணி. இசை நிகழ்ச்சி: ராஜா முத்தையா மன்றம், மதுரை, கும்பகோணம் சங்கீத் ஸ்ரீராமின் சிறுத்தொண்ட நாயன்மார் பொம்மலாட்டம், மாலை 5:45 மணி, குரலிசை: ஹரிப்ரியா, வயலின்: கோகுலகிருஷ்ணன், மிருதங்கம்: முத்துக்குமரன், ஏற்பாடு: தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம், இரவு 7:15 மணி. ஆணவப் படுகொலைகள் எதிர்ப்பு குறித்து சமத்துவக் கருத்தரங்கம்: ராமசுப்பு அரங்கம், மாட்டுத்தாவணி, மதுரை, ஏற்பாடு: ஜாதி ஒழிப்பு முன்னணி, தமிழ்நாடு பெண்கள் இயக்கம், தமிழக மக்கள் பண்பாட்டுக் கழகம், மாலை 5:00 மணி. 6 முதல் 9, 11ம் வகுப்பு மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான ஓவியப் போட்டி: அரசு அருங்காட்சியகம், மதுரை, ஏற்பாடு: மதுரை விவேகன் ஓவியப் பயிற்சி மையம், காலை 9:30 மணி. மருத்துவ ஆய்வக நுட்புநர்களின் அறிவியல் மாநாடு, கண்காட்சி: ஐ.எம்.ஏ., ஹால், மருத்துவக் கல்லுாரி வளாகம், மதுரை, பங்கேற்பு: டாக்டர்கள் கோமதிநாயகம், ராஜசேகர், வசந்தப்ரியன், ஜெயந்தி பிரசாத், செல்வராஜ் மனோ கரன், காலை 9:00 மணி. சர்வதேச அமைதி தின சிறப்பு கருத்தரங்கு: காந்தி மியூசியம், மதுரை, தலைமை: செயலர் நந்தாராவ், சிறப்புரை: வக்பு வாரிய கல்லுாரி முன்னாள் முதல்வர் அப்துல் காதிர், திருச்சி புனித மைக்கேல் கல்லுாரி உதவிப் பேராசிரியர் கிருஷ்ணராஜ், காலை 10:00 மணி. ஓரணியில் தமிழ்நாடு - தீர்மானம் ஏற்பு பொதுக் கூட்டம்: பஸ் ஸ்டாண்ட், புதுார், மதுரை, தலைமை: வட்டச் செயலர் வேலு, சிறப்புரை: அமைச்சர் தியாகராஜன், எம்.எல்.ஏ., தளபதி, செயல்திட்டக்குழு உறுப்பினர் கல்யாணம், மாலை 6:00 மணி. இலவச மிருதங்கம், ஹார்மோனியம் வகுப்புகள்: நாமத்வார் பிரார்த்தனை மையம், இளங்கோ தெரு, அய்யர்பங்களா, மதியம் 12:00 முதல் 3:00 மணி வரை. விளையாட்டு 69வது தேசிய பள்ளிகள் விளையாட்டு குழுமத்திற்கான மாநில விளையாட்டு போட்டிகள்: வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி, மதுரை, 17 வயது மகளிருக்கான டேக்வாண்டோ தேர்வுப் போட்டி, காலை 8:00 மணி. மருத்துவம் மூட்டு, எலும்பு பிரச்னைகள் தொடர்பாக இலவச மருத்துவ முகாம்: சாய் மருத்துவமனை, எஸ்.பி.ஐ., காலனி, பைபாஸ் ரோடு, மதுரை, பங்கேற்பு: டாக்டர்கள் சிந்துஜா, கோபி மனோகர், காலை 9:00 முதல் மாலை 5:00 மணி வரை.
17-Sep-2025