மேலும் செய்திகள்
இன்றைய நிகழ்ச்சி / அக். 3 க்குரியது
03-Oct-2025
கோயில் புரட்டாசி திருவிழா: முத்துநாயகி அம்மன் கோயில், பரவை, மதுரை, மின்னொளி சப்பரத்தில் அம்மனுக்கு சிறப்பு செய்தல், இரவு 7:00 மணி, வள்ளி திருமண நாடகம், இரவு 10:00 மணி. புரட்டாசி கடைசி வெள்ளியை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், குதிரை வாகன அலங்காரம்: முனியாண்டி சுவாமி கோயில், யூனியன் வங்கி காலனி, 4வது தெரு, விளாங்குடி, இரவு 7:00 மணி. ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்குச் சித்திரை வீதி, மதுரை, காலை 10:30 மணி. பக்தி சொற்பொழிவு திருக்குறள்: நிகழ்த்துபவர் - சந்தானம், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி. ஏகாதசி, ராம நாம சங்கீர்த்தனம்: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, இரவு 7:00 மணி. ஹரே ராம மஹாமந்திர கீர்த்தனம்: நாமத்வார் பிரார்த்தனை மையம், இளங்கோ தெரு, அய்யர்பங்களா, காலை 8:00 மணி. திருமூலர் திருமந்திரம்: நிகழ்த்துபவர் - சுப்புராமன், வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி. பொது மாநகராட்சி கவுன்சில் அவசரக் கூட்டம்: மாநகராட்சி அலுவலகம், மதுரை, தலைமை: துணை மேயர் நாகராஜன், காலை 10:00 மணி. அகில இந்திய தெலுங்கு சம்மேளன தலைவர் ரெட்டி, துணைத் தலைவர் கிஷோர் பிறந்தநாள் விழா, தீபாவளி கொண்டாட்டம்: ஒய்.எம்.சி.ஏ., சிறப்பு குழந்தைகள் பள்ளி, மகபூப்பாளையம், மதுரை, ஏற்பாடு: தெலுங்கர் மிஷன் டிரஸ்ட், மதியம் 12:30 மணி. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புத்தாடை வழங்கும் விழா: சின்மயா சேவாமிஷன், டோக் நகர், கோச்சடை, மதுரை, புத்தாடை வழங்குபவர்: விஜயா ஸ்ரீனிவாசன், தலைமை: சுவாமி சிவயோகானந்தா, காலை 11:00 மணி, ஏற்பாடு : சின்மயா சேவா அறக்கட்டளை. விளையாட்டு வருவாய் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் - 14,17,19 வயது மாணவர்களுக்கான பூப்பந்து போட்டி: தியாகராஜர் மேல்நிலைப்பள்ளி, தெப்பக்குளம், மதுரை, 14,17,19 வயது மாணவ மாணவிகளுக்கான மேசைபந்து போட்டி: ரேஸ்கோர்ஸ் மைதானம், மதுரை, ஏற்பாடு: மாவட்ட உடற்கல்வி அலுவலகம், காலை 7:00 மணி முதல். கண்காட்சி மான்சரோவர் ஆடைக் கண்காட்சி: விஜய் மஹால், கே.கே.நகர், மதுரை, காலை 10:00 முதல் இரவு 9:00 மணி ராஜஸ்தான் மேளா - பட்டு, காட்டன் சேலைகள், குர்தீஸ், குழந்தைகளுக்கான ஆடைகள், படுக்கை விரிப்புகள் கண்காட்சி, விற்பனை: ரோட்டரி கிளப் ஆப் மதுரை, விஸ்வநாதபுரம், மதுரை, காலை 10:00 முதல் இரவு 9:00 மணி வரை.
03-Oct-2025