உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / இன்றைய நிகழ்ச்சி

இன்றைய நிகழ்ச்சி

பக்தி சொற்பொழிவுசத ஸ்லோகி: நிகழ்த்துபவர் - கிருஷ்ணமூர்த்தி, வேதாந்த சிரவணானந்தா ஆஸ்ரமம், 4, கீழ மாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் சாலை, மதுரை, மாலை 6:30 மணி.திருமந்திரம்: நிகழ்த்துபவர் - திருமாவளவன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.பொதுநிர்வாகிகள் பொறுப்பேற்பு: யூனியன் கிளப், மதுரை, தலைமை: தலைவர் தனசேகரன், பங்கேற்பு: மாவட்ட ஆளுநர் முருகேசன், வாசவி கிளப் தலைவர் ரவிச்சந்திரன், மண்டல தலைவர் ஸ்ரீதேவி, ஏற்பாடு: மதுரை கிழக்கு லயன்ஸ் கிளப், மாலை 6:30 மணி.'வருவாய்த்துறை போற்றுதும்' இணையவழி கருத்தரங்கு: மதுரை, தலைமை: தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாநிலத்தலைவர் எம்.பி.முருகையன், பங்கேற்பு: பொதுச்செயலாளர் சங்கரலிங்கம், முன்னாள் நிர்வாகிகள் ராஜ்குமார், சுடலையாண்டி, கலியமூர்த்தி, ஏற்பாடு: தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம், இரவு 7:00 மணி.உலக மருத்துவ தினத்தை முன்னிட்டு விருது வழங்கும் விழா: டீன் அலுவலகம், அரசு மருத்துவமனை, மதுரை, தலைமை: தலைவர் நெல்லை பாலு, விருது பெறுபவர்: அரசு மருத்துவமனை டீன் தர்மராஜ், ஏற்பாடு: மதுரை ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்கம், காலை 11:30 மணி.உலக மருத்துவ தினத்தை முன்னிட்டு மருத்துவர்களின் அனுபவங்கள் - கலந்துரையாடல்: கலைஞர் நுாற்றாண்டு நுாலகம், மதுரை, பங்கேற்பு: வாசகர்கள், மாலை 4:00 மணி. தர நிலைகள் - விழிப்புணர்வு நிகழ்ச்சி, மாணவர்களுக்கான கட்டுரை போட்டி: மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி, மதுரை, முன்னிலை: தலைவர் ராஜகோபால், செயலாளர் விஜயராகவன், முதல்வர் ராமசுப்பையா, இயக்குநர் பிரபு, பங்கேற்பு: பி.ஐ.எஸ்., அலுவலர் சிவக்குமார், ஏற்பாடு: தர நிர்ணய மாணவர் மன்றம், காலை 11:30 மணி.பயனாளிகள் தேர்வு தொடர்பாக திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட ஆர்ப்பாட்டம்: கலெக்டர் அலுவலகம், மதுரை, ஏற்பாடு: தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம், மதுரை, மாலை 5:00 மணி.பழங்காநத்தம் மண்டல சீரமைப்பு ஆலோசனைக்கூட்டம்: மாநகர மாவட்ட அலுவலகம், சொக்கிக்குளம், மதுரை, தலைமை: நகர பா.ஜ., தலைவர் மகா சுசீந்திரன், மாலை 6:00 மணி.மருத்துவம்தேர்ச்சி பெற்ற பிளஸ் 2 மாணவர்கள் மதிப்பெண் சான்றிதழை காண்பித்து இலவச கண் பரிசோதனை செய்து கொள்ளும் முகாம்: ஸ்ரீ ராமச்சந்திரா கண் மருத்துவமனை, குட் ஷெட் தெரு, மதுரை, பரிசோதிப்பவர்: டாக்டர் சீனிவாசன், காலை 7:00 முதல் இரவு 7:00 மணி வரை.இலவச மருத்துவ முகாம்: கரூர் வைஸ்யா வங்கிக் கிளை, மாவட்ட நீதிமன்றம் எதிரில், கே.கே.நகர், மதுரை, ஏற்பாடு: கரூர் வைஸ்யா வங்கி, பி.ஜி.எம்., மருத்துவமனை, காலை 10:00 முதல் மதியம் 3:00 மணி வரை.கண்காட்சிஅரசுப் பொருட்காட்சி: தமுக்கம் மைதானம், மதுரை, ஏற்பாடு: செய்தி மக்கள் தொடர்புத் துறை, மாலை 4:00 முதல் இரவு 10:00 மணி வரை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ