மேலும் செய்திகள்
இன்றைய நிகழ்ச்சி / ஆக. 19
19-Aug-2025
கோயில் ஜெயந்தி, நவராத்திரி உற்ஸவம்: நவநீத கண்ணன் சன்னதி, கீழமாரட் செட்டிய தெரு, மதுரை, இந்திர விமானத்தில் சுவாமி வீதியுலா, உறியடி உற்ஸவம், இரவு 8:00 மணி. ஜெயந்தி உற்ஸவம்: ராமசுவாமி நவநீத கிருஷ்ணசுவாமி கோயில், ராமாயணச் சாவடி தெரு, வடக்கு மாசி வீதி, மதுரை, உறியடி, வழுக்குமரம் ஏறுதல், இரவு 7:10 மணி. ராகு கால பூஜை: செல்வ விநாயகர் கோயில், ரயில்வே காலனி, மதுரை, மதியம் 3:00 மணி. ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்குச் சித்திரை வீதி, மதுரை, மதியம் 3:00 மணி. பக்தி சொற்பொழிவு பெரியபுராணம்: நிகழ்த்துபவர் - மல்லிகா, மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி. விவேக சூடாமணி: நிகழ்த்துபவர் - சுவாமி நித்ய சத்வானந்தா, சிரவணானந்த ஆசிரமம், கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி, தீபாராதனை, பிரசாதம் வழங்குதல், இரவு 8:00 மணி. பள்ளி, கல்லுாரி மாநில அளவிலான கல்லுாரிகளுக்கு இடையேயான கூட்டம்: பாத்திமா கல்லுாரி, மதுரை, தலைமை: செயலாளர் இக்னேஷியஸ் மேரி, முதல்வர் பாத்திமா மேரி, சிறப்பு விருந்தினர்: மதுரைக் கல்லுாரி பேராசிரியர் ஈஸ்வரன், ஏற்பாடு: விலங்கியல் துறை, காலை 9:30 மணி. இலக்கியத் திறனாய்வு: செந்தமிழ்க் கல்லுாரி, மதுரை, தலைமை: உதவிப் பேராசிரியர் கோகிலா, சிறப்பு விருந்தினர்: கவிஞர் பேனா. தெய்வம், ஏற்பாடு: பாண்டியன் நுாலக வாசகர் வட்டம், மதியம் 1:30 மணி. பொது கர்நாடக இசைக் கலைஞர் எம்.எஸ்.சுப்புலட்சுமி ஜெயந்தி தின இசை விழா: லட்சுமி சுந்தரம் ஹால், கோகலே ரோடு, மதுரை, சங்கீத வித்வான் சாகேதராமனுக்கு 'மதுரை ஸ்ரீ மீனாட்சி' விருது வழங்குதல், சிறப்பு விருந்தினர்: பேராசிரியர் கு.ஞானசம்பந்தன், மாலை 6:00 மணி, குரலிசை: சாகேதராமன், வயலின்: சாய்ரக்ஷித், மிருதங்கம்: சர்வேஷ் கார்த்திக், கடம்: கார்த்திக், ஏற்பாடு: சத்குரு சங்கீத சமாஜம், மாலை 6:30 மணி. மாதக் கூட்டம்: மீனாட்சி நிலையம், வசுதாரா வளாகம், ஆண்டாள்புரம், மதுரை, சிறப்புரை: யாழ். சந்திரா, மாணவி ஜோதிகா, ஏற்பாடு: மதுரைக் கம்பன் கழகம், மாலை 6:30 மணி. கர்நாடக இசைக் கலைஞர் எம்.எஸ்.சுப்புலட்சுமி பிறந்தநாள் விழா: மஹா பெரியவர் கோயில், பொன்மேனி நாராயணன் ரோடு, எஸ்.எஸ்.காலனி, மதுரை, தலைமை: ராக பிரியா மியூசிக் சேம்பர் கிளப் செயலாளர் ரவி, மரியாதை செய்பவர்: சத்குரு சங்கீத வித்யாலயம் இசைக் கல்லுாரி முன்னாள் முதல்வர் தியாகராஜன், ஏற்பாடு: அனுஷத்தின் அனுக்கிரக நிறுவனர் நெல்லை பாலு, காலை 11:00 மணி. மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்: செயற்பொறியாளர் அலுவலகம், திருமங்கலம், தலைமை: மதுரை மேற்பார்வை பொறியாளர் பத்மாவதி, காலை 11:00 முதல் மதியம் 1:00 மணி வரை. அரசின் நல்லாசிரியர் விருது பெற்றவர்களுக்கு பாராட்டு விழா: எம்.எல்.டபிள்யு.ஏ., மேல்நிலைப் பள்ளி, மணிநகரம், மதுரை, தலைமை: தலைவர் ராஜேந்திரன், பாராட்டுவோர்: சங்க நிர்வாகிகள், ஏற்பாடு: உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் பணி நிறைவு பெற்ற தலைமையாசிரியர்கள் சங்கம், மாலை 5:00 மணி. மருத்துவம் மாணவர்களுக்கான பல் பரிசோதனை முகாம்: மாநகராட்சி நடுநிலைப் பள்ளி, கிருஷ்ணாபுரம் காலனி முதல் தெரு, மதுரை, ஏற்பாடு: மாநகராட்சி, கல்வித்துறை, சி.எஸ்.ஐ., பல் மருத்துவக் கல்லுாரி, காலை 9:30 முதல் மதியம் 1:00 மணி வரை.
19-Aug-2025