மேலும் செய்திகள்
இன்றைய நிகழ்ச்சிகள் /மார்ச் 7க்குரியது
07-Mar-2025
கோயில்பொங்கல் பூஜை: மகா காளியம்மன் கோயில், ரயில்வே காலனி, மதுரை, மதியம் 12:00 மணி.பிரார்த்தனை: சன்மார்க்க சத்திய சேவா சங்கம், 10, நடுத்தெரு, அனுப்பானடி, மதுரை, தலைமை: திருவருட்பிராகச வள்ளலார், மாலை 5:15 மணி.கவச அலங்காரம்: முனியாண்டி சுவாமி கோயில், 2, யூனியன் பேங்க் காலனி, 4வது தெரு, விளாங்குடி, மதுரை,இரவு 7:00 மணி.பங்குனி திருவிழாவில் பொங்கல் வைத்தல்: வடக்கு வா செல்லியம்மன் கோயில், வல்லாளபட்டி -அரியப்பன்பட்டி, காலை 9:00 மணி.பங்குனி திருவிழாவில் திருவிளக்கு பூஜை: முத்துமாரியம்மன் கோயில், மில்கேட், மேலுார், மாலை 5:00 மணி, கரகம் எடுத்தல் இரவு 9:30 மணி.பக்தி சொற்பொழிவுதிருக்குறள்: நிகழ்த்துபவர் -- பெரியகருப்பன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், மீனாட்சி அம்மன் கோயில், வடக்காடி வீதி, மதுரை, இரவு 7:00 மணி.பள்ளி, கல்லுாரிஅயலகத் தமிழர்களின் தமிழ்ப்பணி - பன்னாட்டு கருத்தரங்கம்: சவுராஷ்டிரா கல்லுாரி, பசுமலை, தலைமை: செயலாளர் குமரேஷ், சிறப்பு விருந்தினர்: பெல்ஜியம் தமிழ்ச் சங்க துணைச் செயலாளர் மாணிக்கம் ரங்கசாமி, ஏற்பாடு: கல்லுாரி தமிழ்த் துறை, நடனகோபாலர் தமிழ் மன்றம், உலகப்பல்கலை கழகச் சேவை மன்றம், காலை 10:10 மணி, தொழில்முனைவோருக்கான வாய்ப்புகள் குறித்த கருத்தரங்கு, தலைமை: முதல்வர் ஸ்ரீனிவாசன் சிறப்பு விருந்தினர்: சிவகாசி மெப்கோ பொறியியல் கல்லுாரி பேராசிரியர் ராமச்சந்திரன், ஏற்பாடு: வணிகவியல், கணினி பயன்பாட்டியல் துறை, மதியம் 12:30 மணி.மனநலன் குறித்த சர்வதேச கருத்தரங்கு நிறைவு விழா: அமெரிக்கன் கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர் தவமணி கிறிஸ்டோபர், சிறப்பு விருந்தினர்: எம்.எஸ்., செல்லமுத்து இன்ஸ்டிடியூட் ஆய்வுத் துறை இயக்குனர் கண்ணன், ஏற்பாடு: உளவியல் துறை, மாலை 4:15 மணி.பாரம்பரிய விவசாய ரகங்கள் குறித்த விழிப்புணர்வு பயிலரங்கம் மற்றும் விதை கண்காட்சி: வேளாண் கல்லுாரி, ஆராய்ச்சி மையம், மதுரை, தலைமை: டீன் மகேந்திரன், ஏற்பாடு: விதை அறிவியல் தொழில்நுட்பத்துறை, காலை 10:30 மணி.எக்கோலன் - குழு அமைத்தல்: லேடி டோக் கல்லுாரி, மதுரை, பங்கேற்பு: ஓய்வு ஏ.டி.ஜி.பி., செந்தாமரை கண்ணன், கனியன் ஐ.ஏ.எஸ்., அகாடமி கனியன் பழனிகுமார், ஏற்பாடு: நுாலகம், மதியம் 2:00 மணி.துாய்மை பணி: மதுரை - தேனி ரோடு, தலைமை: முதல்வர் ராமமூர்த்தி, ஏற்பாடு: வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி வேதியியல் துறை, காலை 10:00 மணி.பொதுதினமலர் நாளிதழ், கோவை ஸ்ரீ கிருஷ்ணா இன்ஸ்டிடியூஷன்ஸ் வழங்கும் பிளஸ் 2க்கு பின் என்ன படிக்கலாம் - உயர் கல்விக்கான வழிகாட்டி நிகழ்ச்சி: தமுக்கம் மைதானம், மதுரை, காலை 10:00 மணி முதல் மாலை 6:30 மணி வரை. தமிழ் தமிழர் படைப்பும் ஆளுமையும் - பன்னாட்டு கருத்தரங்கம்: உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை, தலைமை: சங்க இயக்குனர் அவ்வை அருள், பங்கேற்பு: செந்திக்குமார நாடார் கல்லுாரி பேராசிரியை தங்கமாரி, மைய நிறுவனர் கணேசமூர்த்தி, இலக்கிய வட்டச் செயலாளர் வினோத், ஏற்பாடு: கும்பகோணம் மருதம் கலை இலக்கிய ஆய்வு மையம், முத்தரசி கலை இலக்கியப் பண்பாட்டுத் தமிழ் ஆய்விதழ், விருதுநகர் அஞ்சிறைத்தும்பி இலக்கிய வட்டம், காலை 10:00 மணி.தத்துவ ஞானி வேதாத்திரி மகரிஷி நினைவு நாள்: மதுரை செங்குந்தர் மகாஜன சங்கம், 15, தாசில்தார் குறுக்குத்தெரு, முதலியார் காலனி, அண்ணா பஸ் ஸ்டாண்ட் அருகில், மதுரை, தலைமை: சங்கத் தலைவர் ரவீந்திரன், மாலை 5:00 மணி.தொழில் முனைவோருக்கான பயிற்சி: மடீட்சியா ஹால், மதுரை, தலைமை: தலைவர் கோடீஸ்வரன், பயிற்சியாளர்கள்: டி.வி.எஸ்., நிறுவனத்தினர், காலை 10:00 மணி.சுய வேலைவாய்ப்பு பயிற்சி: காந்தி மியூசியம், மதுரை, பயிற்சியாளர்: மியூசிய கல்வி அலுவலர் நடராஜன், காலை 10:15 மணி, சர்வ சமய பிரார்த்தனை: தலைமை: மியூசிய செயலாளர் நந்தாராவ், மாலை 4:30 மணி.ரமலான் நோன்பு சிறப்பு சர்வ சமய அமைதி பிரார்த்தனை: சேவாலயம் மாணவர் இல்லம், 24, குமாரசாமி ராஜா தெரு, செனாய் நகர், மதுரை, தலைமை: மையச் செயலாளர் மோகன், பங்கேற்பு: நவாப் பதிப்பகம் நிறுவனர் அப்துஸ் சலாம், ஏற்பாடு: பல்சமய ஒற்றுமை நட்புறவு வளர்ச்சி மையம், மாலை 6:00 மணி.24ம் மஜா கோனே விருது விழா: சமூக கலாசார தொடர்பு மையம், கடவூர், சிறப்பு விருந்தினர்: அசாம் சமூக தொழில் முனைவோர் ஹேமாபிரவா தேவி, மாலை 4:00 மணி.மருத்துவம்பெண்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம்: சரவணா மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, நரிமேடு, மதுரை ஆலோசனை வழங்குபவர்: டாக்டர் சரவணன், காலை 10:00 மணி முதல்.பொது மருத்துவ சிறப்பு ஆலோசனை முகாம்: தேவதாஸ் மருத்துவமனை, 75, சர்வேயர் காலனி, மதுரை, மாலை 4:00 மணி முதல் இரவு 10 மணி வரை.கண்காட்சிபட்டு, பனாரஸ், காட்டன் சேலைகள், வேட்டிகள், மெத்தை விரிப்புகள், திரைச்சீலைகள் தள்ளுபடி விற்பனை: ஹேண்ட்லுாம் ஹவுஸ், 154, கீழவெளி வீதி, மதுரை, காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை.
07-Mar-2025