பேரூராட்சி கடைகள் ஏலம்
அலங்காநல்லுார்: அலங்காநல்லுார் பஸ் ஸ்டாண்டில் புதிதாக வணிக வளாகம் கட்டப்பட்டு ஜன., 12ல் திறக்கப்பட்டது. இரு தளங்களில் உள்ள 16 கடைகள் மற்றும் கழிப்பறைக்கு ஏலம் நடந்தது. பேரூராட்சி செயல் அலுவலர் சிவக்குமார் தலைமை வகித்தார். அலுவலக மேற்பார்வையாளர் அபிதா முன்னிலை வகித்தார். 3 ஆண்டுகளுக்கு தரைதள கடைகளுக்கு வைப்புத் தொகையாக ரூ.50,000, மேல்தள கடைகளுக்கு ரூ.40 ஆயிரம் செலுத்தி ஏலத்தில் பங்கேற்கலாம் என பேரூராட்சி நிர்வாகம் அறிவித்திருந்தது. 16 கடைகளில் 9 ஏலம் போனது.