| ADDED : டிச 30, 2025 07:40 AM
மதுரை: மதுரை தமுக்கத்தில் தமிழ்நாடு உணவுப் பொருள் வியாபாரிகள் சங்கம் சார்பில் வர்த்தக கண்காட்சி டிச. 31 முதல் ஜன.4வரை நடக்கிறது. நாளை மாலை 5:00 மணிக்கு மாநகராட்சி கமிஷனர் சித்ரா விஜயன் துவக்கி வைக்கிறார். இதயம் எண்ணெய் நிறுவனத்தின் இயக்குநர் முத்து, தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி மண்டல மேலாளர் ஜெபநாத் ஜூலியஸ் பங்கேற்கின்றனர். 250க்கும் மேற்பட்ட ஸ்டால்களில் மின்னணு சாதனங்கள் முதல் ஆட்டோமொபைல் உட்பட அனைத்து வகை பொருட்களும் இடம்பெற்றுள்ளன. ஒருங்கிணைப்பாளர்கள் வேல்சங்கர், ஜெயபிரகாசம், கண்காட்சி தலைவர் மாதவன் கூறியதாவது: 5 நாட்களுக்கு ரூ.25லட்சம் மதிப்பில் பார்வையாளர்களுக்குகுலுக்கல் முறையில் பரிசு வழங்கப்படும். ரூ.3 ஆயிரம் மதிப்புள்ள வீட்டு உபயோகபொருட்கள் 5 நாட்களுக்கு மொத்தம் 500 பேருக்கு வழங்கப்படும். மொபைல் போன்கள், வீட்டுஉபயோக பொருட்கள், சுங்குடி சேலைகள் என விதவிதமான பரிசு பொருட்கள் தரப்பட உள்ளன.சரவணா ஸ்டோர்ஸ் சார்பில் ரூ. ஆயிரம் மதிப்புள்ள கூப்பன்கள் குலுக்கல் முறையில் தினமும் வழங்கப்படும். ருசியான உணவுகளுக்கான கூடமும் உள்ளது. நிறைவு நாளான ஜன.4ல் பம்பர் பரிசாக கார், ஸ்கூட்டர், பிரிட்ஜ் ஆகியவற்றை அமைச்சர் மூர்த்தி வழங்க உள்ளார். தினமும் காலை 11:00 முதல் இரவு 9:00 மணி வரை கண்காட்சியை பார்வையிடலாம். அனுமதி இலவசம். சங்கதுணைத் தலைவர்கள் திருமுருகன், சூரஜ் சுந்தர சங்கர், வினோத்கண்ணா, கிஷோர் ஏற்பாடுகளை செய்துள்ளனர் என்றனர்.