உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / வர்த்தக பொருட்கள் கைத்தொழில் பயிற்சி

வர்த்தக பொருட்கள் கைத்தொழில் பயிற்சி

மதுரை, : கஸ்துாரிபா காந்தி, தில்லையாடி வள்ளியம்மை நினைவு நாளை முன்னிட்டு மதுரை காந்தி மியூசியத்தில் சிறப்பு நிகழ்ச்சி, வர்த்தக பொருட்கள் கைத்தொழில் பயிற்சி நடந்தது. பொருளாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார். செயலாளர் நந்தாராவ் முன்னிலை வகித்தார். தியாகி லட்சுமி காந்தன் பாரதி பேசினார். கைத்தொழில் பயிற்சியை கல்வி அலுவலர் நடராஜன் நடத்தினார். காந்திய சிந்தனை கல்லுாரி முதல்வர் முத்துலட்சுமி சான்றிதழ் வழங்கினார். கடவூர் செசி, அமைதி சங்க உறுப்பினர் மாணவ மாணவியரின் காந்திய கலை நிகழ்ச்சி நடந்தது.தலைவர் சரவணன், நாடகக்கலை ஆசிரியர் ரவி ஒருங்கிணைத்தனர். இயற்கை வாழ்வியல் ஆலோசகர் தேவதாஸ் காந்தி, காந்திய கல்வி மற்றும் ஆராய்ச்சி மைய முதல்வர் தேவதாஸ், பயிற்றுநர்கள் மகாலட்சுமி, வைரமணி கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ