உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பாரம்பரிய கலைவிழா

பாரம்பரிய கலைவிழா

மதுரை : தானம் அறக்கட்டளையின் தானம் கல்வி நிலையம் சார்பில் மண்ணாடி மங்கலத்தில் பாரம்பரிய கலைவிழா நடந்தது. நிர்வாக இயக்குநர் வாசிமலை தலைமை வகித்தார். கல்வி நிலைய இயக்குநர் குருநாதன் வரவேற்றார். சுற்றுலா ஆலோசகர் பாரதி பாரம்பரிய நடை பயணம் குறித்தும், தொல்லியல் ஆய்வாளர் வேதாச்சலம் மதுரையின் சிறப்புகளையும், பேராசிரியை சைரா பானு பாரம்பரியம் குறித்தும் பேசினர். கல்லுாரி மாணவர்களுக்கான விவாதம், வினாடி வினா, புகைப்பட போட்டி, பழமைப் பொருட்கள் கண்காட்சி, ரங்கோலி, குறும்பட போட்டிகள் நடந்தன. சோழவந்தான் விவேகானந்தா கல்லுாரி, பாத்திமா, வெள்ளைச்சாமி நாடார், தியாகராஜர், மங்கையர்க்கரசி கல்லுாரி மாணவர்கள் பங்கேற்றனர். நிர்வாகிகள் சசிகலா, கார்த்திகேயன் ஒருங்கிணைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை