மேலும் செய்திகள்
ஈரோட்டில் இன்று, நாளை போக்குவரத்தில் மாற்றம்
25-Nov-2025
மதுரை: மதுரை கோரிப்பாளையம் பாலப்பணியின் அடுத்த கட்டமாக வைகை தென்கரை சாலையில் பில்லர் மற்றும் இணைப்பு பாலப்பணி நடப்பதை முன்னிட்டு, இன்று (டிச.,15) இரவு முதல் கட்டுமானப்பணி முடியும் வரை வைகை தென்கரை சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. மாட்டுத்தாவணியில் இருந்து வைகை தென்கரை வழியாக சிம்மக்கல் செல்லும் பஸ்கள், கே.கே.நகர் ஆர்ச், அவுட்போஸ்ட், கோரிப்பாளையம், ஏ.வி. பாலம் வழியாக செல்லலாம். ஓபுளா படித்துறை பாலம் சந்திப்பிலிருந்து யானைக்கல் தரைப்பாலத்தின் வழியாக எம்.ஜி.ஆர்., பாலம் சந்திப்பிற்கு செல்லும் மற்ற வாகனங்கள் அனைத்தும் ஓபுளா படித்துறை பாலம் சந்திப்பிலிருந்து முனிச்சாலை மெயின்ரோடு, நெல்பேட்டை சிக்னல் சந்திப்பு வழியாகவோ அல்லது ஓபுளா படித்துறை பாலம் சந்திப்பிலிருந்து வைகை வடகரை சாலைக்கு சென்று தேனி ஆனந்தம் சந்திப்பு வழியாகவோ செல்லலாம். எம்.ஜி.ஆர்., பாலம் சந்திப்பிலிருந்து யானைக் கல் தரைப்பாலத்தின் வழியாக ஓபுளா படித்துறை பாலம் சந்திப்பிற்கு செல்லும் வாகனங்கள் வைகை வடகரை சாலைக்கு சென்று தேனி ஆனந்தம் வழியாகவோ அல்லது எம்.ஜி.ஆர்., பாலம் சந்திப்பிலிருந்து யானைக்கல் தரைப்பாலம் வரை சென்று நெல்பேட்டை வழியாகவோ செல்லலாம்.
25-Nov-2025