பயிற்சி முகாம்
சோழவந்தான் : சோழவந்தான் அருகே திருவேடகம், பாலகிருஷ்ணாபுரத்தில் அ.தி.மு.க., பூத் கமிட்டியினருக்கு பயிற்சி முகாம் நடந்தது. ஒன்றிய செயலாளர் கணேசன் தலைமை வகித்தார். சட்டசபை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் உதயகுமார் ஆலோசனை வழங்கினார். தகவல் தொழில்நுட்ப அணி அப்துல் சமது, சதீஷ்குமார் பயிற்சி அளித்தனர். நிர்வாகிகள் லெட்சுமி, வழக்கறிஞர் காசிநாதன், மணி, கண்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.