உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பயிற்சி மையம் திறப்பு

பயிற்சி மையம் திறப்பு

திருப்பரங்குன்றம்: தியாகராஜர் பொறியியல் கல்லுாரியில் மாணவர்களின் வளர்ச்சி மேம்பாடு மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சி மையம் திறப்பு விழா நடந்தது. கல்லுாரி தாளாளர் ஹரி தியாகராஜன் தலைமை வகித்தார். முதல்வர் அசோக் குமார் முன்னிலை வகித்தார். டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் தலைவர் வெங்குசாமி ராமசாமி திறந்து வைத்து பேசுகையில், ''நமது மாணவர்கள் தொழில்நுட்ப அறிவில் பெரும் வல்லமை பெற்றிருந்தும், அதனை தொடர்பு கொள்ளும் திறனில் உள்ள சிக்கல்களால்தான் வளர்ச்சி தடைபடுகிறது. இதை சரி செய்ய இது போன்ற மையம் பெரிதும் உதவி செய்யும்'' என்றார். டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ் தலைவர் நிர்வாகி சுசீந்திரன், திறன் சக்தி மைய உரிமையாளர் அபர்ணா சிர்ஜ்ஜன் பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ