பயிற்சி துவக்க விழா
மதுரை : 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் மதுரை வேளாண்மை அறிவியல் நிலையத்தில் 26 நாட்களுக்கான தேனீ வளர்ப்பு துவக்க விழா நடந்தது. திட்ட ஒருங்கிணைப்பாளர் சுப்ரமணியன் துவக்கி வைத்தார். பேராசிரியர் நிர்மலா, இணைப் பேராசிரியர்கள் சுரேஷ், ஆனந்த் பயிர் உற்பத்தியில் தேனீக்களின் பங்கு குறித்து பேசினர். நவ.13 வரை பயிற்சி நடக்கிறது.