உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பயிற்சி நிறைவு விழா

பயிற்சி நிறைவு விழா

மதுரை, : மதுரை அரசு மியூசியத்தில் கல்வியிடை பயிற்சி பெற்ற லேடிடோக் கல்லுாரி விலங்கியல் துறை மாணவிகளுக்கு பயிற்சி நிறைவு விழா நடந்தது. புராதன விலங்கியல் பொருட்களை பதப்படுத்துதல், காட்சிப்படுத்துதல், அகழாய்வில் கிடைத்த விலங்குகளின் எலும்புகளை ஆய்வுக்கு உட்படுத்தும் முறை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.வவ்வால் ஆராய்ச்சியாளர் பாஸ்கரன், மதுரை காமராஜ் பல்கலையில் உள்ள வவ்வால்கள் குறித்து விவரித்தார். வனத்துறை குற்றங்கள் விழிப்புணர்வு தொடர்பாக வனத்துறை குற்றவியல் துறை இணை இயக்குநர் மனசிர் பயிற்சி அளித்தார். காப்பாட்சியர் மருது பாண்டியன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை