விவசாயிகளுக்கு பயிற்சி
மேலுார்: விநாயகபுரம் விவசாயிகளுக்கு கலசலிங்கம் வேளாண்மை, தோட்டக்கலை கல்லுாரி மாணவிகள் வேளாண் பணி அனுபவ திட்டத்தின் கீழ் பயிற்சி அளித்தனர். ஒருங்கிணைப்பாளர் ஜெயந்தி, பேராசிரியர் ஜெயபிரபா தலைமையில் நேர்த்தியான வாழைக்கன்று தேர்வு செய்வது, கண்டுகளுக்கு கார்போப்யூரான் மருந்து தெளிக்கும் முறை, பயன்கள் குறித்து பயிற்சி அளித்தனர்.