மேலும் செய்திகள்
இயற்கை விவசாய பயிற்சி முகாம்
08-Oct-2026
மதுரை: மதுரை கிழக்கு அட்மா திட்டம் சார்பில் பில்லுசேரி கிராமத்தில் மண்வள மேம்பாடு, விளைநிலம் காப்போம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி நடந்தது. வேளாண் துறை உதவி இயக்குநர் பாலமுருகன் மண்வள மேலாண்மை குறித்து பேசினார். இயற்கை முறை விவசாயம் குறித்து வேளாண்மை அலுவலர் (ஓய்வு) மகாராஜன் விளக்கினார். திட்ட ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் ஒருங்கிணைத்தார். ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் ஆனந்தகுமார், உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் ஜெகன் பாண்டி, முகிலா செய்தனர். வட்டார தொழில்நுட்ப மேலாளர் ராமகிருஷ்ணன் நன்றி கூறினார்.
08-Oct-2026