மேலும் செய்திகள்
அரசு ஊழியர்கள் சங்க மாநாடு
24-Nov-2024
மதுரை: மதுரை கல்வி மாவட்ட இடைநிலைக் கல்வி சா்ரபில், இளஞ்செஞ்சிலுவை சங்க கவுன்சிலர்களுக்கு ஒருநாள் பயிற்சி முகாம் புனித பிரிட்டோ மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. 'மாணவர்கள் போதைப் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்த்தல் மற்றும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துதல்' என்ற தலைப்பில் முகாம் நடந்தது.மாவட்ட கல்வி அலுவலர் அசோக்குமார் துவக்கி வைத்தார். பள்ளித் தாளாளர் லுயிஸ் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் ஜோசப் வாழ்த்தி பேசினார். மாவட்ட இளஞ்செஞ்சிலுவை சங்க அமைப்பாளர் நாகநாதன் வரவேற்றார். செஞ்சிலுவை சங்க மாவட்ட செயலாளர் ஏ.ராஜ்குமார், கவுன்சிலர்களுக்கு பயிற்சி அளித்தார். இணை அமைப்பாளர் ஒலிவா சாந்தசீலி போதைப் பொருள் குறித்த விழிப்புணர்வு பயிற்சி அளித்தார். இணை அமைப்பாளர் சகாயகுமார், ஆலோசகர் ஆர்.ராஜ்குமார் பங்கேற்றனர்.
24-Nov-2024