உள்ளூர் செய்திகள்

பயிற்சி பட்டறை

திருப்பரங்குன்றம்; மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி வணிகவியல் கணினி பயன்பாட்டுத் துறை சுயநிதிப் பிரிவு காம்கேப்ஸ் சங்கம் சார்பில் எதிர்கால மேலாளர்களுக்கான மென்திறன் மற்றும் மதிநுட்ப சிந்தனை குறித்த பயிற்சி பட்டறை நடந்தது. கல்லுாரிச் செயலாளர் ஸ்ரீதர் தலைமை வகித்தார். தலைவர் விஜயராகவன், முதல்வர் ராமசுப்பையா, சுயநிதிப் பிரிவு இயக்குனர் பிரபு, முன்னிலை வகித்தனர். மாணவி வருஷ்ணவி வரவேற்றார். உதவி பேராசிரியர் கீர்த்திகா அறிமுக உரையாற்றினர். உதவி பேராசிரியர் சண்முகப்பிரியா பேசினார். மாணவி ஆரோக்கியபிரிசிலா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ