பயிற்சிப் பட்டறை
மதுரை: மதுரை பாத்திமா கல்லுாரியில் ஆராய்ச்சி, மேம்பாட்டு குழு சார்பில் பேராசிரியர்களுக்கு பயிற்சிப் பட்டறையை கல்லுாரி முதல்வர் பாத்திமா மேரி துவக்கி வைத்தார். துணை முதல்வர்கள் பிந்து ஆண்டனி, அருள்மேரி, வித்யா முன்னிலை வகித்தனர். பேராசிரியர்கள் ஆய்வுக் கட்டுரைகளை ஸ்கோபஸ், வெப் ஆப் சயின்ஸ் போன்ற ஆய்விதழ்களில் வெளியிடுவது, கட்டணமில்லாத ஆய்விதழ், பயன்படுத்த வேண்டிய எழுத்துரு போன்றவை குறித்து திருச்சி தேசிய கல்லுாரி உதவிப் பேராசிரியர் கார்த்திகேயன் விளக்கினார். ஆராய்ச்சிப் புலத் தலைவர் மாலதி வரவேற்றார். உதவிப் பேராசிரியை கார்த்திகா தொகுத்து வழங்கினார். புலத் தலைவர்கள் மாலதி, ஆஷா ஒருங்கிணைத்தனர். உதவிப்பேராசிரியை ஆர்த்தி நன்றி கூறினார்.