டிரான்ஸ்பா்மர் திருட்டு
கொட்டாம்பட்டி: கருங்காலக்குடி ஆற்றுக்கால் பகுதியில் பிப்ரவரியில் 2 டிரான்ஸ்பார்மர்கள் திருடு போனது. அதனால் மின்வாரிய அதிகாரிகள் புதிய டிரான்ஸ்பார்மரை பொருத்தி வெல்டிங் வைத்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, வெல்டிங்கை துண்டித்த சில மர்ம நபர்கள் டிரான்ஸ்பார்மரில் உள்ள தாமிர கம்பிகள், 150 லிட்டர் ஆயிலை திருடிச் சென்றனர். கொட்டாம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.