மேலும் செய்திகள்
அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் போராட்டம்
19-Aug-2025
மதுரை : தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற தொழிலாளர் சங்கம் ஏ.ஐ.டி.யூ.சி., மாநில நிர்வாகிகள், நிர்வாக குழு கூட்டம் நடந்தது. மாநில தலைவர் நாச்சிமுத்து தலைமை வகித்தார். பொது செயலாளர் நாராயணசிங் வேலை அறிக்கை தாக்கல் செய்தார். மாநில நிர்வாகிகள் பாண்டி, மணவழகன், ஐயப்பன், சுப்பிரமணி, வீரபத்திரன், மாரிமுத்து, மகேந்திரன் பங்கேற்றனர். செப். 9ல் மதுரையில் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்துவது, ஓய்வு பெற்ற தொழிலாளர்களை அணிதிரட்டுவது என முடிவெடுத்தனர். குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும். 1.4.2003க்குப்பின் பணியில் சேர்ந்தவர்களை பென்ஷன் திட்டத்தில் இணைக்க வேண்டும். உடல் தகுதியின்மை தொழிலாளர்களுக்கு மாற்றுப்பணி, குடும்ப ஓய்வூதியத்தை ௫ ஆண்டுகளுக்கு ஒருமுறை குறைப்பதை கண்டிப்பது, ஓய்வு நாளில் பணிமுடிப்பு பலன்களை வழங்க வேண்டும், அகவிலைப்படி நிலுவையை தாமதமின்றி வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.
19-Aug-2025