மேலும் செய்திகள்
மாணவர் ஆராய்ச்சிக்கு அமைப்பு துவக்கம்
22-Jul-2025
ஸ்ரீவில்லிபுத்துார் : காது கேளாமையை சரி செய்ய ஏ.ஐ. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் புதிய சிகிச்சை முறையினை கலசலிங்கம் பல்கலைகழக பேராசிரியர் ஷேக் அப்துல்லா கண்டறிந்துள்ளார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் நந்தவனபட்டி தெருவை சேர்ந்தவர் ஷேக் அப்துல்லா 35. கிருஷ்ணன் கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் எலக்ட்ரானிக் கம்யூனிகேஷன் துறையில் பி.எச்டி படித்து அங்கேயே பேராசிரியராக பணி புரிகிறார். இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு மூட்டு வலிக்கு புதிய கருவியை உருவாக்கினார். தற்போது காது கேட்காதவர்களுக்கு, கேட்கச் செய்ய ஏ.ஐ. தொழில்நுட்பம் , அல்ட்ரா சவுண்ட் மூலம் புதிய சிகிச்சை வழிமுறைகளை ஆராய்ச்சி செய்து கண்டறிந்துள்ளார். இது குறித்து ஷேக் அப்துல்லா கூறியதாவது: நமது காதுகள் வெளிப்பகுதி, நடுப்பகுதி, உட்பகுதி என 3 பிரிவுகளை கொண்டது. இதில் நடுப்பகுதியில் உள்ள ஏர் டிரம் மிக,மிக மெல்லியதாக இருக்கும். இதில் ஏதேனும் ஓட்டை விழுந்தாலோ, புண் ஏற்பட்டாலோ காது கேட்காது. காக்லியா எனும் உட்பகுதி வார்த்தைகளை சரியாக சப்தத்துடன் உணரச் செய்கிறது. இதில் குறைபாடு ஏற்பட்டாலும் காது கேட்காது. இதனை சரி செய்ய ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் அல்ட்ரா சவுண்ட் அலைகளை பயன்படுத்தி, காக்லியாவின் இறந்த செல்களை மறு உற்பத்தி செய்ய வாய்ப்புள்ளது என்பதை கண்டறிந்துள்ளேன். இதனை சென்னையில் ஒரு மருத்துவமனையில் ஒருவருக்கு பரிசோதித்ததில், காதுகேளாமை தன்மை 68 டெசிபல் அளவு என்பதிலிருந்து 60 ஆக குறைந்துள்ளது. தொடர்ந்து பரிசோதனை நடக்கிறது. இது வெற்றி பெறும் பட்சத்தில் காது கேளாமைக்கும், காது இரைச்சலுக்கும் நிரந்தர தீர்வு காண இந்த தொழில்நுட்பம் உதவும் என்றார்.
22-Jul-2025