உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / குப்பை தீயால் கருகும் மரங்கள்

குப்பை தீயால் கருகும் மரங்கள்

மதுரை: மதுரை குலமங்கலம் ரோட்டில் மீனாம்பாள்புரத்திற்குள் செல்லும் பகுதியில் தரைப்பாலத்தையொட்டி குப்பை தொட்டி இடையூறாக வைக்கப்பட்டுள்ளது. இதனால் கனரக வாகனங்கள் பாலத்தை கடப்பதில் சிரமம் ஏற்படுகிறது. தொட்டி நிரம்பியதால் செல்லுார் கண்மாய் ஓடையில் குப்பை கொட்டுகின்றனர். இதில் சிகரெட் புகைத்து வீசுவதால் தீப்பற்றி புகைமண்டலமாக காட்சி தருகிறது. நீர்நிலைகள் பாதுகாப்பு இயக்க நிறுவனர் அபுபக்கர் கூறுகையில், ''பாலம் அருகே வேம்பு, அரசமரங்களை கண்போல் காத்து வருகிறோம். தீயால் மரங்கள் கருகுகின்றன. சுற்றுசூழல் பாதிக்கிறது. குப்பைத்தொட்டியை மாற்று இடத்தில் வைக்கவேண்டும்'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை