உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  டி.ஆர்.இ.யூ.,  ஆர்ப்பாட்டம்

 டி.ஆர்.இ.யூ.,  ஆர்ப்பாட்டம்

மதுரை: மதுரை ரயில்வே காலனியில் டி.ஆர்.இ.யூ., தொழிற்சங்கம் சார் பில் தொழிற்சங்கங்களிடையே பாகுபாடு காட்டும் உதவிக் கோட்ட பொறியாளரைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. ஓபன்லைன் பிரிவு செயலாளர் வீரணசுரேஷ் தலைமை வகித்தார். பொருளாளர் கருமலைக்கண்ணன் முன்னிலை வகித்தார். அனைத்து கேங் ரூம்களிலும் ஆண், பெண் ஊழியர்களுக்கு தனித்தனியாக கழிப்பறை வசதி ஏற்படுத்துதல், வந்தே பாரத், தேஜஸ் உள்ளிட்ட ரயில்களில் கீ மேன்களை நியமனம் செய்தல், கொல்லர் தொடர்பான பணிகளை ஒப்பந்த முறையில் செயல்படுத்தக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். டி.ஆர்.இ.யூ., கோட்டச் செயலாளர் சிவக்குமார், பொதுக்கிளை பொருளாளர் ஹரிக்குமார், கிளைச்செயலாளர் சேதுக்கரை, துணைச் செயலாளர் சீனிவாசன், உதவிச் செயலாளர் செல்வக்குமார், உதவிக் கோட்டத் தலைவர் வினோத்பாபு, டி.ஆர்.பி.யூ., கோட்டச்செயலாளர் சங்கரநாராயணன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை