உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மனப்பட்டி கோயில் காளைக்கு அஞ்சலி

மனப்பட்டி கோயில் காளைக்கு அஞ்சலி

மேலுார்: கச்சிராயன்பட்டி ஊராட்சி மனப்பட்டி துவராள்பதி அம்மன் கோயில் காளை நேற்று உடல் நல குறைவால் இறந்தது. இறந்த காளையை கிராம மக்கள் அலங்காரம் செய்து, கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கொண்டு சென்று கோயில் அருகே அடக்கம் செய்தனர். இக் காளை 10 ஆண்டுகளாக அலங்காநல்லுார், பாலமேடு பகுதிகளில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்று கிராமத்திற்கு பெருமை சேர்த்தது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை