மேலும் செய்திகள்
டெட் தாள் 2 தேர்வு 1777 பேர் ஆப்சென்ட்
5 minutes ago
சிறுவர் நிகழ்ச்சி
5 minutes ago
மதுரை: மத்திய அரசின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை (எஸ்.ஐ.ஆர்.,) கண்டித்து பழங்காநத்தத்தில் த.வெ.க.,சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டச் செயலாளர் தங்கப்பாண்டி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர்கள் கல்லாணை,விஜயன்பன், தலைவர் விஷால் கிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். மாநில இணைச் செயலாளர் நிர்மல்குமார், எஸ்.ஐ.ஆர்.,ஐ கண்டித்து பேசினார். கழக பேச்சாளர் வீரவிக்னேஷ் உள்பட பலர் பங்கேற்றனர். கல்லாணை பேசுகையில், ஆர்ப்பாட்டம் நடப்பது தொடர்பாக ஒரு நோட்டீஸ் ஒட்டினாலும் அனுமதியுள்ளதா என எங்களை போலீசார் கேட்கின்றனர். பங்கேற்க வந்தவர்களை போலீஸ் அலைக்கழித்ததால் தாமதமாக நடத்தப்பட்டது என்றார்.
5 minutes ago
5 minutes ago