மேலும் செய்திகள்
செய்தியால் வெளிச்சம்
23-Jul-2025
அலங்காநல்லுார்: அலங்காநல்லுார் ஒன்றியம் அய்யங்கோட்டை ஊராட்சியில் மதுரை - திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் உள்ளது. இங்குள்ள இருபுற சர்வீஸ் ரோட்டிலும் கண்மாய், ஓடை கரைகளில் 'செப்டிக் டேங்க்' கழிவுகள், ஊராட்சி வீடுகளில் சேகரிக்கும் குப்பை கழிவுகளை கொட்டி எரிப்பது தொடர்கிறது. இதனால் இப்பகுதியில் நிலம், நீர், காற்று மாசுபடுகிறது. இதுபோன்று தினமும் கழிவுகளை கொட்டி எரிப்பவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய ஊராட்சி நிர்வாகமும் தன் பங்கிற்கு குப்பை வாகனங்களில் கொண்டு வந்து கொட்டி எரிக்கிறது. இதனால் இங்கு மேயும் கால்நடைகள் பல்வேறு பாதிப்புகளை சந்திக்கின்றன. நான்கு வழிச்சாலை புகைமண்டலமாக மாறுகிறது. சர்வீஸ் ரோடு கண்மாய் கரைகளில் மரங்களை நட்டு பராமரிக்க வேண்டிய ஊராட்சி நிர்வாகம் குப்பை நெடுந்துாரம் கொட்டி எரிக்கிளது. கோழி, தொழிற்சாலை கழிவுகளும் கொட்டி எரிக்கப்படுகிறது. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
23-Jul-2025