உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஆசிட் ஊற்றி மரத்தை அழிக்க முயற்சி

ஆசிட் ஊற்றி மரத்தை அழிக்க முயற்சி

மதுரை : மதுரை தெற்காவணி மூல வீதியில் மரத்தை ஆசிட் ஊற்றி அழிக்க முயற்சித்த சம்பவம் நடந்துள்ளது. அப்பகுதியிலுள்ள நகைக்கடை பஜாரில், கொளுத்தும் வெயிலுக்கு இதம் தரும் வகையில், ரோட்டோரம் வேம்பு, புங்கை உள்ளிட்ட பல வகை மரங்கள் உள்ளன. தங்கள் கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள், வாகனங்களை நிறுத்துவதற்கு இடையூறு ஏற்படுவதாக கருதி, ஆண்டாண்டு காலமாக நிழல் தரும் மரங்களை சிலர் அழிக்க முயற்சிக்கின்றனர். நேற்று அப்பகுதியில் உள்ள நகைக்கடை முன், நன்கு வளர்ந்த நிலையில் உள்ள ஒரு மரத்தின் மூட்டில், ஆசிட் ஊற்றினர். அதனை பட்டுப்போக வைத்து அகற்றும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். தெற்குவாசல் போலீசார் விசாரிக்கின்றனர். முன்பு கடம்ப மரங்கள் நிரம்பிபசுமையாக இருந்த மதுரையை, மீட்டெடுக்கும் வகையில் வனத்துறையும், தன்னார்வலர்களும் நகரின் பல இடங்களில் மரங்களை நட்டு, அதன் அவசியத்தை உணர்த்திவருவது குறிப்பிடத்தக்கது. ஓரிரு தினங்களுக்கு முன் தான் வைத்தமரங்களை தனியார் அப்புறப்படுத்தியதால், 35 வயதான வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். ''மரங்களை அழிப்பது கொலைக்கு சமம். எனவே அதனை அழிக்க முயற்சிக்கும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ