டங்ஸ்டன் திட்டம் ஜன.7ல் நடை பயணம்
மேலுார்: முல்லை பெரியாறு ஒருபோக பாசன விவசாயிகள் சங்க நிர்வாகிகள் ரவி, குறிஞ்சி குமரன், இளங்கோ, கல்லானை தெரிவித்துள்ளதாவது: அரிட்டாபட்டி, நாயக்கர்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 5 ஆயிரம் ஏக்கரில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க ஏலம் எடுத்துள்ளது. இதனால் பல்லுயிர் தளம், வரலாற்றுச் சின்னங்கள், மக்களின் குடியிருப்பு மற்றும் விவசாயம் பாதிக்கப்படும். அதனால் ஜன. 7 நரசிங்கம்பட்டியில் இருந்து 16 கி.மீ., துாரத்திற்கு நடைபயணம் தொடங்கி மதுரை தல்லாகுளம் தலைமை தபால் நிலையம் முன்பு நிறைவுபெறும். அங்கு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவித்துள்ளனர்.