உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மாணவர்களை தொழில் முனைவோராக மாற்றுங்கள் நீதிபதி ஸ்ரீமதி பேச்சு

மாணவர்களை தொழில் முனைவோராக மாற்றுங்கள் நீதிபதி ஸ்ரீமதி பேச்சு

எழுமலை : எழுமலை பாரதியார் மெட்ரிக் பள்ளியின் 29 வது ஆண்டு விழா நடந்தது. தாளாளர் பொன் கருணாநிதி வரவேற்றார். நிர்வாகிகள் பொன் திருமலைராஜன், வரதராஜன், உதயசந்திரன் முன்னிலை வகித்தனர். முதல்வர் ஆறுமுகசுந்தரி ஆண்டறிக்கை வாசித்தார்.சிறப்பு விருந்தினர் உயர்நீதிமன்ற நீதிபதி ஸ்ரீமதி பேசுகையில், ''மாணவர்களை தொழில் முனைவோராக மாற்ற ஆசிரியர்கள் முயற்சி எடுங்கள். மாணவர்கள் யோகா, தியானம் செய்யுங்கள். இதன்மூலம் புத்தி, உடல் ஆரோக்கியம் சரியாக இருக்கும். எதைச் செய்தாலும் உடனடியாக பலன் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தை கைவிடுங்கள். படிப்படியாக உயர்வதே முழுமையானதாக இருக்கும். மாணவர்கள் போதைப்பழக்கத்திற்கு அடிமையாகாமல் பெற்றோர் கண்காணிக்க வேண்டும்'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை