உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ரூ.8 கோடி கஞ்சா வைத்திருந்த இருவர் கைது

ரூ.8 கோடி கஞ்சா வைத்திருந்த இருவர் கைது

அவனியாபுரம்: தாய்லாந்து நாட்டிலிருந்து இலங்கையின் கொழும்பு நகரம் வழியாக மதுரைக்கு கடத்தி வரப்பட்ட 8 கோடி ரூபாய் மதிப்பிலான உயர் ரக கஞ்சா 8 கிலோவை சுங்க இலாகா வான் நுண்ணறிவு பிரிவினர் பறிமுதல் செய்தனர். கொழும்புவில் இருந்து நேற்று முன்தினம் காலை மதுரைக்கு 'ஸ்ரீலங்கன்' விமானம் வந்தது. அந்த விமானத்தில் கடத்தல் பொருட்கள் வருவதாக சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவினருக்கு தகவல் வந்தது. விமானத்தில் வந்த பயணியரின் உடைமைகளை சோதனையிட்டனர். தஞ்சாவூர், பாபநாசம் சக்கரா பள்ளி முஹம்மத் மைதீன், 26, சென்னை சாகுல் ஹமீது, 50, ஆகியோர் வைத்திருந்த உடைமைகளில் தலா 4 கிலோ உயர்ரக கஞ்சா மறைத்து எடுத்து வந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். கஞ்சாவை பறிமுதல் செய்து, கடத்தி வந்த இருவரையும் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை