உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / விபத்தில் இருவர் பலி

விபத்தில் இருவர் பலி

திருமங்கலம்: திருமங்கலம் புளியகவுண்டன்பட்டியைச் சேர்ந்த விவசாயி சிவா 39, இவர் செப்., 14ல் வாகை குளத்தில் உறவினர் இல்ல விசேஷத்திற்கு சென்று விட்டு டூவீலரில் வந்து கொண்டிருந்தார். கருமாத்துார் கோட்டையூர் விலக்கு அருகே மதுரை -தேனி ரோட்டை கடக்க முயன்ற போது தேனியில் இருந்து வந்த அரசு பஸ் மோதியது. இதில் காயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர் நேற்று இறந்தார். உசிலம்பட்டி நரசிங்க புரத்தைச் சேர்ந்த விவசாயி மெடிக்கல் ராஜா 60, இவர் நேற்று முன்தினம் மதுரை தேனி ரோட்டில் டூவீலரில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர் திசையில் வந்த மற்றொரு டூவீலர் மோதியதில் காயம் அடைந்தார். மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த அவர் பலியானார். செக்கா னுாரணி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ