உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / டூவீலர் விபத்தில் இருவர் பலி

டூவீலர் விபத்தில் இருவர் பலி

திருமங்கலம்: ஆலம்பட்டியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் 27. நேற்று காலை தந்தையின் டீக்கடைக்கு தேவையான பொருட்களை திருமங்கலத்தில் வாங்கிவிட்டு டூவீலரில் ஊருக்கு வந்து கொண்டிருந்தார். ஆலம்பட்டி அருகே செங்கோட்டை - பழநி அரசு பஸ் மோதியதில் இறந்தார். டிரைவர் ரமேஷிடம் போலீசார் விசாரிக்கின்றனர். * மதுரை பசுமலையை சேர்ந்தவர் கழுவன் 52. கர்நாடகா மாநிலத்தில் முறுக்கு வியாபாரம் செய்து வந்தார். விடுமுறைக்கு சொந்த ஊரான திருமங்கலம் அருகே மதிப்பனுாருக்கு நேற்று முன்தினம் டூவீலரில் சென்று விட்டு இரவு 11:00 மணிக்கு பசுமலைக்கு திரும்பினார். திருமங்கலம் - சமயநல்லுார் நான்கு வழிச்சாலையில் செங்குளம் சந்திப்பு அருகே வாகனம் ஒன்று மோதியதில் இறந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை