மேலும் செய்திகள்
கழிவுநீர் தேங்குவதால் மக்கள் மறியல்
18-Nov-2024
ஓடைகளில் தொடரும் நீர்வரத்து விவசாயிகள் மகிழ்ச்சி
27-Nov-2024
உசிலம்பட்டி : மதுரை காமராஜர்புரத்தை சேர்ந்தவர்கள் ஆரோக்கியசாமி 52, ஜேசுதாஸ் 41. சகலபாடிகளான இருவரும் ஜவுளிக்கடையில் பணி புரிந்து வந்தனர்.ஆரோக்கியசாமி மகளுக்கு சில நாட்களுக்கு முன் திருமணமாகி மணமக்கள் இருவரும் தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் வசித்தனர். அவர்களை மறு வீட்டுக்கு அழைத்து வர டூவீலரில் ஆரோக்கியசாமி, ஜேசுதாஸ் ஆண்டிபட்டி சென்றனர்.பின் அங்கிருந்து நேற்று மாலை மதுரை புறப்பட்டனர். உசிலம்பட்டி செட்டியபட்டி அருகே வந்த போது எதிரே ரகுபாரதி 43, என்பவர் மதுரையிலிருந்து கம்பம் நோக்கி ஓட்டிச்சென்ற கார் மோதியது.இதில் இருவரும் பலத்த காயமுற்று பலியாயினர்.உசிலம்பட்டி தாலுகா போலீசார் விபத்து குறித்து விசாரிக்கின்றனர்.
18-Nov-2024
27-Nov-2024