உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கவனிப்பாரில்லாத முதலைக்குளம் ஊருணி

கவனிப்பாரில்லாத முதலைக்குளம் ஊருணி

சோழவந்தான்: சோழவந்தான் அருகே நடுமுதலைக்குளம் ஊருணி பராமரிக்கப்படாமல் சாக்கடையாக மாறிவிட்டது என அப்பகுதியினர் வேதனை தெரிவித்தனர். கனிச்செல்வம்: இங்கு நாடக மேடை அருகே பெரிய ஊருணி உள்ளது. இதை சுற்றி பல கோயில்கள் உள்ளன. இது மக்கள் பயன்பாட்டிற்கும், நிலத்தடி நீர்மட்ட உயர்வுக்கும், விவசாயத்திற்கும் ஆதாரமாக உள்ளது. இங்குள்ள முத்தாலம்மன் கோயில் புரட்டாசி திருவிழா முளைப்பாரி, கரகம் உள்ளிட்ட புனிதமான நிகழ்வுகள் ஊருணியில் நடக்கும். தற்போது இது பராமரிக்கப்படாமல் குப்பை கொட்டப்பட்டு ஆகாயத்தாமரை, அல்லி உள்ளிட்ட செடிகள் வளர்ந்து தண்ணீர் கருப்பு நிறமாக மாறி சாக்கடை போன்று காட்சியளிக்கிறது. இதனால் துர்நாற்றம் வீசி அப்பகுதியில் சுகாதார சீர்கேடு நிலவுகிறது. பலமுறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் பலனில்லை. ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ