உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  ஒன்றிய அலுவலகம் முற்றுகை

 ஒன்றிய அலுவலகம் முற்றுகை

உசிலம்பட்டி: உசிலம்பட்டி ஒன்றியம் கீரிபட்டி ஊராட்சியில் சில மாதங்களுக்கு முன்பு வரை ஒரு மாதத்தில் 2 வாரங்களுக்கு வேலை உறுதியளிப்புத்திட்டத்தின் கீழ் பணி வழங்கப்பட்டது. சில மாதங்களாக சுழற்சி முறையில் மாதம் ஒரு வாரம் மட்டுமே பணி வழங்கப்படுகிறது. எனவே பழைய முறைப்படி பணி வழங்க வலியுறுத்தி, நேற்றுமதியம் 12:30 மணிக்கு கீரிபட்டி, போலியம்பட்டி கிராம பெண்கள் உசிலம்பட்டி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பி.டி.ஓ., அன்பரசன் தலைமையில் அலுவலர்கள், போலீசார் போராட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மீண்டும் பழைய முறைப்படி பணி வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததால் போராட்டம் கைவிடப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ