பாசன நீரை 6 நாள் திறக்க 4 நாள் நிறுத்த வலியுறுத்தல்
மேலுார்: மேலுாரில் முல்லை பெரியாறு ஒருபோக பாசன விவசாயிகள் நலச்சங்க கூட்டம் நடந்தது. தலைவர் முருகன் தலைமை வகித்தார். செயலாளர் ரவி, பொருளாளர் ஜெயபால் முன்னிலை வகித்தனர். மேலுார் ஒருபோக பாசனப்பகுதியில் நவ.5 முதல் முறை பாசனம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதே போல் பி.டி.ஆர்., பெரியாறு கால்வாய்களிலும் முறை பாசனத்தை அமல்படுத்த வேண்டும். 18-ம் கால்வாயில் தண்ணீர் அடிக்கடி திறக்கப்படுவதால் அரசு ஆணைப்படி தண்ணீர் திறப்பு நாட்கள் முடிவடைந்ததும் தண்ணீரை நிறுத்த வேண்டும். வடகிழக்கு பருவமழை சரியாக பெய்யாததால் முறை பாசனத்தில் பாசன நீரை 6 நாட்கள் திறக்க வேண்டும், 4 நாட்கள் நிறுத்த வேண்டும். ஒவ்வொரு உபகோட்டத்திற்குரிய பங்கு தண்ணீரை மட்டுமே வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்களை நிறைவேற்றினர்.