மேலும் செய்திகள்
ரயிலில் மாடு சிக்கி சேவை பாதிப்பு மக்கள் ஆவேசம்
14-Sep-2025
மதுரை : கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்துார்பேட்டை அருகே முன்னே சென்ற சரக்கு ரயில் இன்ஜின் பழுது காரணமாக, வைகை ரயில் 2மணி நேரத்திற்கும் மேல்தாமதமாக மதுரை வந்தது. மதுரை - சென்னை இடையே தினமும் வைகை 'சூப்பர் பாஸ்ட்' ரயில் இயக்கப்படுகிறது. காலை 6:45 மணிக்கு மதுரையில் புறப்பட்டு மதியம் 2:15 மணிக்கு எழும்பூர் செல்கிறது. மறுமார்க்கம் மதியம் 1:45 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு, இரவு 9:20 மணிக்கு மதுரை வருகிறது. 495 கி.மீ., துாரத்தை 7:30 மணி நேரத்தில் கடக்கிறது. நேற்று வழக்கம் போல் எழும்பூரில் இருந்து புறப்பட்ட வைகை ரயில் (12635), மாலை 4:09 மணிக்கு விழுப்புரத்தை கடந்து விருத்தாச்சலம் நோக்கி வந்தது. பின் உளுந்துார்பேட்டை ஸ்டேஷனில் திடீரென நிறுத்தப்பட்டது. இரண்டரை மணி நேரமாக அங்கு ரயில் நின்றதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். அங்கிருந்த ஸ்டேஷன் மாஸ்டர், ஓட்டுநர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின் அங்கிருந்து புறப்பட்டு 2:30 மணி நேரம் தாமதமாக, இரவு 7:20 மணிக்கு விருத்தாச்சலம், 9:15 மணிக்கு திருச்சி, 10:30 மணிக்கு திண்டுக்கல் வந்தது. இரவு 11:30 மணியளவில் மதுரை வந்தது. உளுந்துார்பேட்டை - பூவனுார் இடையே ரயில் தடவாள பொருட்களை கொண்டு சென்ற சரக்கு ரயிலின் டீசல் இன்ஜினில் பழுது ஏற்பட்டு நடுவழியில் நின்றதால், வைகை ரயில் உளுந்துார்பேட்டையில் நிறுத்தி வைக்கப்பட்டது. பின் மாற்று இன்ஜின் வரவழைக்கப்பட்டு 'ரூட் க்ளியர்' செய்த பின் வைகை ரயில் புறப்பட்டதாக ரயில்வே தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
14-Sep-2025