வேத பாராயணம் நிறைவு
மதுரை: மதுரை காஞ்சி காமகோடி மடத்தில் 48 நாட்களாக நடந்த கிருத்திகா மண்டல வேத பாராயணம் நேற்றுடன் நிறைவு பெற்றது. ரிக் வேதத்தில் கண்ணன், யஜூர் வேதம் சந்துரு உட்பட வேத விற்பன்னர்கள் தினமும் பாராயணம் செய்தனர். நிறைவு நாளான நேற்று வேத விற்பன்னர்களை மடத்தின் சார்பில் செயலாளர் வெங்கடேசன், நிர்வாகிகள் ஸ்ரீராமன், சங்கரராமன் கவுரவித்தனர்.