உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பயனாளிகளுக்கு காய்கறி வண்டி

பயனாளிகளுக்கு காய்கறி வண்டி

மதுரை: மதுரை கலெக்டர் அலுவலகத்தில் தோட்டக்கலைத்துறை சார்பில் தேசிய தோட்டக்கலைத் இயக்கத்தின் கீழ், 90 பயனாளிகளுக்கான நடமாடும் காய்கறி, பழங்கள் தள்ளுவண்டிகளை அமைச்சர் மூர்த்தி வழங்கினார். இந்தாண்டிற்கு 300 பேருக்கு தள்ளுவண்டி வழங்க நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக ரூ.15 ஆயிரம் மதிப்பில் 90 பேருக்கு வழங்கப்பட்டது. கலெக்டர் பிரவீன்குமார், வேளாண் இணை இயக்குநர் முருகேசன், தோட்டக்கலை துணை இயக்குநர் பிரபா, உதவி இயக்குநர்கள் ஜனரஞ்சனி, கார்த்திப்ரியா கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை