உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / இன்று வாகன பேரணி

இன்று வாகன பேரணி

மேலுார்: அரிட்டாபட்டி, நாயக்கர் பட்டி பகுதிகளில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம் ஏலம் எடுத்துள்ளதை ரத்து செய்ய வலியுறுத்தி 2 மாதங்களாக கிராமத்தினர் போராடி வருகின்றனர். இந்நிலையில் முல்லைப் பெரியாறு ஒரு போக பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் இன்று (ஜன. 7) மேலுாரில் கடையடைப்பு செய்து, நரசிங்கம்பட்டி பெருமாள் மலையில் இருந்து நடைபயணமாக மதுரை தல்லாகுளம் சென்று தலைமை தபால் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த ஏற்கனவே முடிவு செய்திருந்தனர். இப் பயணத்திற்கு போலீசார் அனுமதி மறுத்ததால், நரசிங்கம்பட்டியில் இருந்து வாகனங்களில் ஊர்வலமாக சென்று ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக விவசாய சங்க நிர்வாகிகள் ரவி, குறிஞ்சி குமரன் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை