உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சோலைமலையில் வேல் வழிபாடு

சோலைமலையில் வேல் வழிபாடு

அழகர்கோவில்: அழகர்கோவில் சோலைமலை முருகன் கோயிலில் விஷ்வ ஹிந்து பரிஷத் (வி.எச்.பி.,) அமைப்பினர் வேல் வழிபாடு செய்தனர். மாவட்ட தலைவர் ஜெயா கார்த்திக் தலைமை யில் நடந்த சிறப்பு பூஜையில் வேல் வைத்து கந்த சஷ்டி கவசம் பாடி வழிபட்டனர். தென்னிந்திய அமைப்பாளர் பாலு சரவணா கார்த்திக் கூறுகையில், ''வீடுதோறும் கந்த சஷ்டி கவசத்தை ஒலிக்கச் செய்யும் நோக்கில், வி.எச்.பி., சார்பில் தமிழகத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் அக்.25ல் வேல் பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது. அக்.26ல் வேல் பூஜை அக். 27 கந்த சஷ்டி தினத்தன்று கோ பூஜையுடன் மக்களை ஒன்றிணைத்து கந்த சஷ்டி கவசம் பாராயணமும் மேற்கொள்ளப்பட உள்ளது'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி