உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / திருப்பரங்குன்றத்தில் வி.எச்.பி., வேல் பூஜை

திருப்பரங்குன்றத்தில் வி.எச்.பி., வேல் பூஜை

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் வேல் பூஜை நடந்தது. விஸ்வ ஹிந்து பரிஷத் மாநில அமைப்பு செயலாளர் பாலாஜி, மாநில துணைத் தலைவர் ரஜினிகாந்த், நிர்வாகிகள் கோவிந்தராஜ், ஜெயகார்த்திக், நடிகர் ரஞ்சித் ஆகியோர் 5 அடி உயர பித்தளை வேலுடன் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வந்தனர். அவர்களை அகில பாரத அனுமன் சேனா மாநில அமைப்பு பொதுச்செயலாளர் ராமலிங்கம், மாவட்ட தலைவர் சக்திவேல் வரவேற்றனர். நடிகர் ரஞ்சித் கூறுகையில்,' மதுரை முருகன் மாநாடு தீர்மானப்படி ஐப்பசி மாதம் வரக்கூடிய கந்த சஷ்டியன்று தமிழகம் முழுவதும் வேல் பூஜை நடத்தப்படும். அக்., 25 முதல் அக்.,27வரை ஆயிரம் கோயில்களில் வேல் பூஜை, கோ பூஜை, கந்த சஷ்டி பாராயணம் நடத்தப்பட உள்ளது. தேச ஒற்றுமை, மக்கள், சமுதாய நலனுக்காகவும், இயற்கைக்காகவும் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது,' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !